தேசிய அறிவியல் தினம் 2024... அக்னி ஏவுகணை முதல் சந்திரயான் வரை இந்தியாவின் வியத்தகு அறிவியல் கண்டுபிடிப்புகள்

First Published Feb 24, 2024, 2:49 PM IST

தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் துறையில் இந்தியா நிகழ்த்திய சில வியத்தகு சாதனைகள் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

சர் சி.வி.ராமனை கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆண்டுதோறும் பிப்ரவரி 28ஆம் தேதி தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. ராமன் விளைவிற்காக 1930-ம் ஆண்டில் நோபல் பரிசு வாங்கி இருக்கிறா சி.வி.ராமன். நோபல் பரிசு பெற்ற முதல் தமிழரும் இவர் தான். அவர் கண்டறிந்த ராமன் சிதறல், போட்டானின் உறுதியற்ற சிதறல் ஆகியவை இன்றளவும் அறிவியல் தொழில்நுட்பத்தில் ஒரு மிகப்பெரிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

சி.வி.ராமன் கண்டுபிடித்த 'ராமன் விளைவு' கோட்பாட்டை உலகறிய அறிவித்தது பிப்ரவரி 28-ம் தேதி தான் என்பதால் அன்றைய தினம் தேசிய அறிவியல் தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1986ஆம் ஆண்டு தேசிய அறிவியல் தொழில்நுட்ப பரிமாற்றக் குழு தான் இந்த அறிவியல் தினத்தை அறிவித்தது. 

இந்திய அறிவியலை உலக அளவில் தலைநிமிர்த்திய பெருமை சர்.சி.வி.ராமனை சாரும். அவரது கண்டுபிடிப்பான ராமன் விளைவு அறிவியலில் ஒரு மகத்தான புரட்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இன்று ராமன் விளைவைப் பயன்படுத்தாத அறிவியல் துறைகளே இல்லை என கூறலாம். அந்த அளவுக்கு இயற்பியல், உயிரியல், வேதியியல், மருந்தியல், புவியியல், அகழ்வாராய்ச்சி தொடங்கி, தடயவியல், அழகு சாதனவியல் என ராமன் விளைவின் பயன்பாடுகள் பரந்து விரிந்து கிடக்கிறது. இப்படி அறிவியலில் இந்தியா பல மகத்தான சாதனைகளை படைக்க ஊந்துகோளாக இருந்துள்ளார் ராமன். இந்த நிலையில், அறிவியலில் இந்தியா நிகழ்த்திய சாதனைகள் பற்றி பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... நிலவில் தரையிறங்கிய முதல் தனியார் நிறுவன லேண்டர்! அப்பல்லோவுக்குப் பின் சாதித்த ஒடிசியஸ்!

ஆர்யபட்டா (இந்தியாவின் முதல் செயற்கைகோள்)

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ உருவாக்கிய முதல் செயற்கைக்கோள் தான் ஆர்யபட்டா. முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள் கடந்த 1975-ம் ஆண்டு ஏப்ரல் 19-ந் தேதி விண்ணில் ஏவப்பட்டது. 

அக்னி ஏவுகணை

1980-களில் ஏவுகணை உருவாக்க தொடங்கிய இந்தியா, கடந்த 1989-ம் ஆண்டு அக்னி ஏவுகணையை வெற்றிகரமாக ஏவி பரிசோதனை செய்தது. இதையடுத்து கண்டுபிடிக்கப்பட்ட ஏவுகணைகளுக்கு அக்னி வரிசையில் பெயரிடப்பட்டு உள்ளது. 

டிஎன்ஏ கைரேகை

இந்தியாவில் டிஎன்ஏ கைரேகை கடந்த 1988-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சி கவுன்சிலில் உள்ள விஞ்ஞானிகள் இதனை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர். உலகிலேயே டிஎன்ஏ கைரேகையை பயன்பாட்டுக்கு கொண்டு வந்த மூன்றாவது நாடு இந்தியா.

பொக்ரான் 2 (அணு ஆயுத சோதனை)

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பொக்ரானில் இந்தியா கடந்த 1998-ம் ஆண்டு மே 11ந் தேதி ஐந்து அணுகுண்டுகளை நிலத்தடியில் வெற்றிகரமாக சோதனை செய்தது. இதையடுத்து இந்த சோதனைக்கு பொக்ரான் 2 என பெயரிட்டனர்.

சந்திரயான் 

நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக இஸ்ரோ உருவாக்கிய விண்கலம் தான் சந்திரயான். இதுவரை 3 சந்திரயான் விண்கலங்கள் ஏவப்பட்டு உள்ளன. இதில் கடந்த ஆண்டு ஏவப்பட்ட சந்திரயான் 3 விண்கலம் நிலவின் தென் திருவத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு சாதனை படைத்தது.

ஆதித்யா விண்கலம்

சந்திரயான் நிலவை ஆய்வு செய்வது போல் சூரியனை ஆய்வு செய்வதற்காக இந்தியா உருவாக்கிய விண்கலம் தான் ஆதித்யா. சமீபத்தில் ஆதித்யா எல்1 விண்கலம் ஏவப்பட்டு சூரியனில் ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... என்னது... ஜிமெயில் குளோஸ் பண்ண போறாங்களா? இல்லவே இல்ல... கூகுள் சொல்றது இதுதான்!

click me!