பில்டப் கொடுத்தும் வேலைக்கு ஆகல.. பாக்ஸ் ஆபிஸில் புஷ்வானம் ஆன ஸ்டார் - ஒரே வாரத்தில் இம்புட்டு தான் கலெக்‌ஷனா?

First Published May 18, 2024, 6:39 AM IST

இளன் இயக்கத்தில் கவின் நடித்துள்ள ஸ்டார் திரைப்படம் கடந்த வாரம் ரிலீஸ் ஆன நிலையில், அதன் முதல் வார பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்தை தற்போது பார்க்கலாம்.

star movie

சிவகார்த்திகேயனை போல் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து கலக்கிக் கொண்டிருப்பவர் கவின். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த டாடா திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றியடைந்ததால் கவினை தலையில் தூக்கி வைத்து கொண்டாடியது கோலிவுட். அப்படத்தின் எதிர்பாரா வெற்றியால் கவின் நடிக்கும் அடுத்தடுத்த படங்கள் மீதான எதிர்பார்ப்பும் எகிறியது. டாடா படத்தின் வெற்றிக்கு பின்னர் கவின் நடித்த திரைப்படம் தான் ஸ்டார்.

Kavin star movie

இளன் இயக்கிய இப்படத்தில் முதலில் நடிக்க கமிட் ஆனது ஹரீஷ் கல்யாண் தான். அவரை வைத்து ரஜினி, கமலின் விண்டேஜ் லுக்கில் போட்டோஷூட்டெல்லாம் நடத்தி போஸ்டரை வெளியிட்டனர். ஆனால் ஒரு சில காரணங்களால் ஹரீஷ் கல்யாண் இப்படத்தில் இருந்து விலகியதை அடுத்து அந்த வாய்ப்பு கவினுக்கு சென்றது. டாடா படத்துக்கு பின்னர் கவினின் மார்க்கெட் எகிறியதால் இப்படத்தை தாராளமான செலவளித்து எடுத்திருந்தனர்.

இதையும் படியுங்கள்... திருமணத்திற்கு பின் முதல் முறையாக மாமாவுடன் பிறந்தநாள் கொண்டாடிய இந்திரஜா! வைரலாகும் போட்டோஸ்!

star movie Box Office

ஸ்டார் திரைப்படத்தில் கவினுக்கு ஜோடியாக அதிதி போஹங்கர் நடித்திருந்தார். மேலும் லால், கீதா கைலாசம், காதல் சுகுமார் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருந்தார். இப்படத்தின் டிரைலருக்கும் மிகுந்த வரவேற்பு கிடைத்ததால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் எகிறியது. அதுமட்டுமின்றி புரமோஷனிலும் ஆஹா ஓஹோ என பில்டப் கொடுத்ததால் இப்படத்திற்கு மிகப்பெரிய ஓப்பனிங்கும் கிடைத்தது.

star movie Collection

முதல் மூன்று நாட்கள் பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டை நடத்திய ஸ்டார் திரைப்படம் ரூ.10 கோடிக்கு மேல் வசூலித்தது. ஆனால் போக போக படத்திற்கு நெகடிவ் விமர்சனங்கள் குவியத் தொடங்கியதால், படிப்படியாக பாக்ஸ் ஆபிஸிஸ் வசூலும் குறையத் தொடங்கியது. அதன்படி இப்படம் முதல் வார இறுதியில் வெறும் ரூ.15 கோடி மட்டுமே வசூலித்து உள்ளது. அதிலும் கடந்த வியாழக்கிழமை வெறும் ரூ.61 லட்சம் மட்டுமே இப்படம் வசூலித்து உள்ளதாம். இந்த வாரம் வெளிவந்த சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் ஸ்டார் படத்தின் வசூல் மேலும் பிக் அப் ஆக வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... Weapon : ஆண்டவர் ஸ்டைலில் "கோஸ்டாக" மாறிய சத்யராஜ்.. சூப்பர் ஹியூமன் படமா? - வெளியான வெப்பன் பட ட்ரைலர்!

click me!