GV Prakash : இசை அசுரன் ஜிவி பிரகாஷ் இத்தனை கோடி சொத்துக்களுக்கு அதிபதியா? வியக்க வைக்கும் GV-ன் Net Worth இதோ

First Published Jun 13, 2024, 9:22 AM IST

GV Prakash Net Worth : இன்று பிறந்தநாள் கொண்டாடி வரும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமாரின் சொத்து மதிப்பு குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

GV Prakash Kumar

தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். சிறுவயதில் இருந்தே இசையின் மீது அதீத ஆர்வம் கொண்டிருந்த ஜிவி பிரகாஷை சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியது ஏ.ஆர்.ரகுமான் தான். ஜிவி பிரகாஷின் தாய் மாமா தான் ஏ.ஆர்.ரகுமான், அவர் இசையமைப்பில் வெளிவந்த ஜென்டில்மேன் படத்தில் இடம்பெற்ற ‘சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே’ பாடல் தான் ஜிவி பிரகாஷ் முதன்முதலில் பாடிய பாடலாகும். 

Music Director GV Prakash

ஏ.ஆர்.ரகுமானிடம் இசை பயின்று தன்னை படிப்படியாக மெருகேற்றிக் கொண்ட ஜிவி பிரகாஷ், கடந்த 2006-ம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்த வெயில் திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். அந்த படத்திற்காக அவர் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் ஹிட் ஆனதால், யார்ரா இந்த பையன் என ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமே வியந்து பார்த்தது. அப்படிப்பட்ட ஒரு திறமைவாய்ந்த கலைஞன் தான் ஜிவி.

GV Prakash Birthday

பின்னர் கோலிவுட்டின் மாஸ் நடிகர்களான விஜய், அஜித், ரஜினி போன்றவர்களின் படங்களுக்கு இசையமைத்த ஜிவி பிரகாஷ், செல்வரகாவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் என்கிற மாஸ்டர் பீஸ் படத்திற்கு தன்னுடைய இசை மூலம் உயிர் கொடுத்திருந்தார். அந்த படத்திற்காக கடினமாக உழைத்த ஜிவி-க்கு அந்த சமயத்தில் அங்கீகாரம் கிடைக்காவிட்டாலும், அப்படத்தையும், அதில் உள்ள இசை மற்றும் பாடல்களை ரசிகர்கள் காலம் கடந்து கொண்டாடி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... Vanangaan vs Thangalaan: ஒரே நாளில் ரிலீஸ்.. பாலாவின் வணங்கான் படத்தை பதம் பார்க்க வருகிறது விக்ரமின் தங்கலான்

GV Prakash, saindhavi

இப்படி இசையில் முழுவதுமாக ஆதிக்கம் செலுத்தி வந்த ஜிவிக்கு போகப் போக நடிப்பின் மீது ஆர்வம் வந்தது. இதையடுத்து டார்லிங் படம் மூலம் ஹீரோவாக எண்ட்ரி கொடுத்த ஜிவி பிரகாஷ், அடுத்தடுத்து சில ஹிட் படங்களை கொடுத்ததால் அவருக்கு ஹீரோவாக நடிக்க வாய்ப்புகள் குவிந்தன. பிசியான ஹீரோவான பின்னரும் சூர்யாவின் சூரரைப் போற்று, தனுஷின் வாத்தி, கேப்டன் மில்லர் என பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து அதற்காக விருதும் வென்றிருக்கிறார் ஜிவி. குறிப்பாக சூரரைப் போற்று படத்திற்காக ஜிவி பிரகாஷ் முதன்முறையாக தேசிய விருது வென்றார்.

இவருக்கு கடந்த 2013-ம் ஆண்டு திருமணம் ஆனது. தனது பள்ளி தோழியான பாடகி சைந்தவியை தான் ஜிவி பிரகாஷ் காதலித்து கரம்பிடித்தார். இந்த ஜோடிக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது. திருமணமாகி 11 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த ஜிவி பிரகாஷ், சைந்தவி ஜோடி அண்மையில் விவாகரத்து பெற்று பிரிவதாக அறிவித்தது. 

Music Director GV Prakash Net Worth

மனைவியை பிரிந்த பின்னர் இன்று இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது 38-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் அவரின் சொத்து மதிப்பு குறித்த விவரம் வெளியாகி உள்ளது. அதன்படி பிசியான நடிகராகவும், இசையமைப்பாளராகவும் கலக்கி வரும் ஜிவி பிரகாஷிற்கு ரூ.80 கோடிக்கு மேல் சொத்துக்கள் உள்ளதாம். இதுதவிர ஏராளமான சொகுசு கார்களையும் சொந்தமாக வைத்திருக்கிறார் ஜிவி பிரகாஷ்.

இதையும் படியுங்கள்... புஸ்சுனு போன ‘புஷ்பா 2’ பிசினஸ்... வேறுவழியின்றி ரிலீஸ் தேதியை மாற்றும் படக்குழு - ‘கோட்’ உடன் மோதுகிறதா?

Latest Videos

click me!