அமேசான் பார்சலில் பாம்பு.. எக்ஸ்பாக்ஸ் கன்ட்ரோலரை ஆர்டர் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

By Raghupati R  |  First Published Jun 19, 2024, 5:33 PM IST

அமேசான் ஆப்பில் ஆன்லைனில் ஆர்டர் செய்த பாக்சில் பாம்பு இருப்பதைக் கண்டு பெங்களூரில் ஒரு தம்பதியினர் அதிர்ச்சியடைந்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


பெங்களூரை சேர்ந்த தம்பதியினர் அமேசானில் மென்பொருள் பொறியாளர்களான தம்பதியினர், ஆன்லைனில் எக்ஸ்பாக்ஸ் கன்ட்ரோலரை ஆர்டர் செய்திருந்தனர். ஆனால் அவர்களது பேக்கேஜுக்குள் ஒரு நாகப்பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

விஷப் பாம்பு அதிர்ஷ்டவசமாக பேக்கேஜிங் டேப்பில் சிக்கியதால், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தம்பதியினர் வீடியோ ஒன்றை பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். அதில், "நாங்கள் 2 நாட்களுக்கு முன்பு அமேசானில் இருந்து ஒரு எக்ஸ்பாக்ஸ் கன்ட்ரோலரை ஆர்டர் செய்தோம். அந்த பேக்கேஜில் ஒரு பாம்பு கிடைத்தது.

Tap to resize

Latest Videos

பேக்கேஜ் நேரடியாக எங்களிடம் டெலிவரி பார்ட்னரால் ஒப்படைக்கப்பட்டது (வெளியில் விடப்படவில்லை). நாங்கள் சர்ஜாபூர் சாலையில் வசிக்கிறோம். இந்த முழு சம்பவத்தையும் கேமராவில் படம் பிடித்தோம்.  மேலும் இதற்கு நேரில் கண்ட சாட்சிகள் எங்களிடம் உள்ளனர்" என்று வாடிக்கையாளர் கூறினார். மேலும் தெரிவித்த அவர்கள், "நாங்கள் முழுமையான பணத்தை அமேசானில் இருந்து திரும்பப் பெற்றோம்.

Couple orders Xbox from Amazon, finds cobra in package.

Snake was stuck to the packaging tape, hence did not harm anyone & it has been safely released away from public.

Beware next time when you open your packages : B'luru.pic.twitter.com/YOj1Cj29Yw

— Dr. Vedika (@vishkanyaaaa)

இது அமேசானின் அலட்சியம் மற்றும் அவர்களின் மோசமான போக்குவரத்து/கிடங்கு சுகாதாரம் மற்றும் மேற்பார்வையால் ஏற்பட்ட பாதுகாப்பு மீறல் என்பது தெளிவாகிறது. இதற்கு பொறுப்பு எங்கே உள்ளது. பாதுகாப்பில் இவ்வளவு பெரிய குறைபாடு?" என்று கூறியுள்ளார்கள். இந்த பாம்பு பொதுமக்கள் அணுக முடியாத இடத்தில் பாதுகாப்பான இடத்தில் விடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் பட்ஜெட் ரூ.15 ஆயிரம் ரூபாய் தானா.. பட்ஜெட்டிற்குள் அடங்கும் தரமான 5 ஸ்மார்ட்போன்கள்..

click me!