50 ஆண்டுகளாக 30 கிராமங்களுக்கு தண்ணீர் கொடுக்கும் வற்றாத அதிசயக் கிணறு!

By SG Balan  |  First Published Jun 19, 2024, 5:03 PM IST

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு ராமகுண்டத்தை சுற்றியுள்ள 30 கிராம மக்கள் குடிநீர் மற்றும் பிற தேவைகளுக்கு இந்தக் கிணற்றை பயன்படுத்தி வந்தனர். இந்தக் கிணறு இன்றும் தண்ணீர் வழங்கி வாகன ஓட்டிகளின் தாகத்தை தணிக்கிறது.


ஒரு காலத்தில் பல கிராமங்களில் கிணறுகள் ஒரு முக்கியப் பகுதியாக இருக்கும். கிணறுகளில் மக்கள் தண்ணீர் எடுத்துக் குடிக்கவும் பிற தேவைகளுக்கும் பயன்படுத்தி வந்தனர். காலப்போக்கில், நகரங்கள் வளர்ச்சியடைந்து, நகராட்சி அல்லது மாநகராட்சி நிர்வாகம் சார்பில் நல்ல தண்ணீரை வழங்கியதால், இந்த ஊற்று கிணறுகள் கிட்டத்தட்ட மறைந்துவிட்டன.

ஆனால் தெலுங்கானாவின் பெத்தப்பள்ளி மாவட்டத்தில் உள்ள ஒரு ஊரில் கிணற்றில் எப்போதும் தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது. இங்குள்ள மக்களும் இந்தக் கிணற்றை பாதுகாத்து வருகின்றனர்.அந்த கிணற்றின் பின்னால் உள்ள வரலாறு என்ன என்று பார்ப்போம்.

Tap to resize

Latest Videos

பெத்தப்பள்ளி மாவட்டம் ராமகுண்டத்தில் உள்ள ஓ சாய் ஹோட்டலில் உள்ள ஊட்டா பாவிக்கு ஒரு வரலாறு உண்டு. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு ராமகுண்டத்தை சுற்றியுள்ள 30 கிராம மக்கள் குடிநீர் மற்றும் பிற தேவைகளுக்கு இந்தக் கிணற்றை பயன்படுத்தி வந்தனர். இந்தக் கிணறு இன்றும் தண்ணீர் வழங்கி வாகன ஓட்டிகளின் தாகத்தை தணிக்கிறது.

திறப்பு விழாவுக்கு முன் இடிந்து விழுந்த பாலம்! தரமற்ற கட்டுமானத்தால் வீணாய் போன ரூ.12 கோடி!

50 ஆண்டுகளுக்கு முன், அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்கள் இங்கு வந்து குடிநீருக்காக கிணற்றில் இருந்து தண்ணீரை எடுத்து வந்தனர். சில சமயம் கிணற்றில் சேறு நிரம்பியபோது, தண்ணீர் எடுக்க மக்கள் சிரமப்பட்டனர். அப்போது ஹனுமய்யா என்பவர் தனது சொந்தப் பணத்தில் கிணறு அமைக்கும் பணியை மேற்கொண்டு மக்களுக்கு சிரமமின்றி தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்தார். மக்கள் அந்தக் கிணற்றை ஊட்டா வாவி என்று அழைத்தனர்.

பல கிராமங்களின் தாகம் தணித்த ஊட்டா பாவி கிணறு இப்போது யாருக்கும் பயன்படாமல் உள்ளது. சாய் ஹோட்டலின் மேலாளர் அப்சல் இந்தக் கிணற்றை அவ்வப்போது சுத்தம் செய்து பராமரித்து வருகிறார். சில கிராமங்களில் கோடைக்காலம் வரும்போது கிணறுகள் முற்றிலும் வற்றிவிடுகின்றன. ஆனால் ஊட்டா ராவி கிணற்றில் எப்போதும் தண்ணீர் நிரம்பி இருக்கும்.

இந்த தண்ணீரில் 50 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சுவையே இப்போதும் இருக்கிறது என்று அப்பகுதியினர் சொல்கிறார்கள். இந்தக் கிணற்றில் உள்ள தண்ணீர் வடிகட்டிய தண்ணீரைவிட சுவையாக இருப்பது இதன் சிறப்பு என மக்கள் கூறுகின்றனர். அந்தப் பகுதிக்கு வரும் பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் இந்தக் கிணற்றில் இருந்து தண்ணீர் குடிக்க விரும்புவதாகவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

தேமுதிக அலுவலகத்திற்கு நாகப்பாம்பு ரூபத்தில் வந்தாரா விஜயகாந்த்? தொண்டர்கள் நெகிழ்ச்சி!

click me!