Rolls-Royce கார்களை வாங்கி குவிக்கும் நீதா அம்பானி.. புதிய காரின் விலை இத்தனை கோடியாமே!!

First Published Apr 9, 2024, 2:41 PM IST

நீதா அம்பானியின் கார் சேகரிப்பில் புதிய ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்று சேர்ந்துள்ளது.

mukesh ambani

உலகின் பணக்கார குடும்பங்களில் ஒன்றான அம்பானி குடும்பம். தங்கள் ஆடம்பரமான வாழ்க்கை முறை மற்றும் செழிப்பான வணிக முயற்சிகள், ஆடம்பர கொண்டாட்டங்கள் ஆகியவை காரணமாக அவ்வப்போது மக்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றனர்.

முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி ரிலையன்ஸ் அறக்கட்டளை, திருபாய் அம்பானி சர்வதேச பள்ளியின் தலைவர் மற்றும் நிறுவனராக இருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைவர், நீதா முகேஷ் அம்பானி கலாச்சார மையத்தை (NMACC) தொடங்கியது என பல சாதனைகளை நீதா அம்பானி செய்துள்ளார்.

Mukesh nita ambani

ரூ.974703 கோடி சொத்து மதிப்புடன் முகேஷ் அம்பானி இந்தியாவின் பெரும் பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். அம்பானி குடும்பம் ரூ 15000 கோடி மதிப்புள்ள இந்தியாவின் மிக விலையுயர்ந்த வீடு ஆண்டிலியாவில் வசித்து வருகிறது. பம் நாட்டில் மிகவும் விலையுயர்ந்த சில கார்களை அம்பானி குடும்பம் வைத்திருக்கிறது.

Nita Ambani

அந்த வகையில் நீதா அம்பானியின் கார் சேகரிப்பில் புதிய ரோல்ஸ் ராய்ஸ் கார் ஒன்று சேர்ந்துள்ளது. முகேஷ் அம்பானியின் மனைவி நீதா அம்பானி புதிய Rolls Royce Phantom VIII EWB காரை சுமார் ரூ.12 கோடிக்கு வாங்கியுள்ளார். 

Rolls Royce Phantom VIII EWB ஆனது 6.75-லிட்டர் V12 ட்வின்-டர்போசார்ஜ் செய்யப்பட்ட பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது, இது அதிகபட்சமாக 571 Bhp மற்றும் 900 Nm உச்ச முறுக்குவிசையை உற்பத்தி செய்கிறது.

12 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ரோல்ஸ்ராய்ஸ் கார் மும்பை தெருக்களில் பிரமாண்டமான கான்வாய்களுடன் நிதா அம்பானியின் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

முன்னதாக கடந்த தீபாவளியன்று முகேஷ் அம்பானி தனது மனைவி நிதா அம்பானிக்கு ரூ.10 கோடி மதிப்பிலான ரோல்ஸ்ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் காரை பரிசாக வழங்கினார். ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் இந்தியாவில் மிகவும் விலையுயர்ந்த SUV ஆகும், சில பிரபலங்கள் மட்டுமே நாட்டில் இந்த கவர்ச்சியான காரை வைத்திருக்கிறார்கள்.

இந்தியாவில் பிரபலமான ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் பிளாக் பேட்ஜ் காரை வைத்திருப்பவர்களில் பாலிவுட் நட்சத்திரம் ஷாருக்கானும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!