முகேஷ் அம்பானியின் பெரும் பணக்கார சம்மந்திகள்.. யாருடைய சொத்து மதிப்பு அதிகம் தெரியுமா?

First Published Mar 5, 2024, 10:31 AM IST

பிராமல், மேத்தா மெர்சண்ட் ஆகிய பணக்கார குடும்பங்களுடன் அம்பானி சம்மந்தம் செய்துள்ளார். இதில் யாருடைய சொத்து மதிப்பு அதிகம் என்று பார்க்கலாம். 

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்ற மாபெரும் வணிக சாம்ராஜ்யத்தின் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானியின் ப்ரீ வெட்டிங் நிகழ்ச்சி குஜராத்தில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்துள்ளது. மார்ச் 1 முதல் 3 வரை நடந்த இந்த கோலாகல நிகழ்ச்சியில் இந்திய திரைப்பிரபலங்கள், விளையாட்டு பிரபலங்கள் மட்டுமின்றி சர்வதேச பிரபலங்களும் கலந்து கொண்டனர். பல நூறு கோடி செலவில் நடந்த ஆனந்த் அம்பானியின் ப்ரீ வெட்டிங் நிகழ்வு பேசு பொருளாக மாறியது. 

ஆனந்த் அம்பானிக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ள உள்ள நிலையில், அம்பானிக்கு அமைந்த சம்மந்திகளின் மதிப்பு மற்றும் செல்வாக்கு குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். பிராமல், மேத்தா மெர்சண்ட் ஆகிய பணக்கார குடும்பங்களுடன் அம்பானி சம்மந்தம் செய்துள்ளார். இதில் யாருடைய சொத்து மதிப்பு அதிகம் என்று பார்க்கலாம். 

முகேஷ் அம்பானி நீதா அம்பானி தம்பதிக்கு ஆகாஷ் அம்பானி, இஷா அம்பானி, ஆனந்த் அம்பானி என்ற 3 பிள்ளைகள் உள்ளனர். இதில் முகேஷ் அம்பானியின் ஒரே மகளான இஷா அம்பானி, அஜய் பிராமல், ஸ்வாதி பிராமல் தம்பதியின் மகன் ஆனந்த் பிராமலை திருமணம் செய்து கொண்டார். மருத்து, நிதி சேவை மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் கோலோச்சி வரும் பிராமல் குழுமத்தின் தலைவர் தான் அஜய் பிராமல். போர்ப்ஸ் அறிக்கையின் படி அஜய் பிராமலின் சொத்து மதிப்பு ரூ. 34,898 கோடி ரூபாய் ஆகும். 

முகேஷ் அம்பானியின் மூத்த மகன் ஆகாஷ் அம்பானி ரஸல் மேத்தா மற்றும் மோனா மேத்தா தம்பதியின் மகளான ஸ்லோகா மேத்தாவை திருமணம் செய்துள்ளார். வைரம், ரியல் எஸ்டெட், wஇதி சேவை என பல துறைகளில் தொழில் செய்து வரும் ரஸல் மேத்தா ரோஸி ப்ளூ இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் ஆவார். இவரின் சொத்த் மதிப்பு ரூ.1844 கோடி ஆகும்.

anant ambani radhika merchant wedding


அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி, வீரேன் மெர்ச்சண்ட், ஷைலா மெர்ச்சண்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டை திருமணம் செய்ய உள்ளார். வீரேன் மெர்சண்ட் என்கோர் ஹெல்த் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆவார். எனவெ முகேஷ் அம்பானியின் சம்மந்திகளில் பிராமல் குடும்பத்தின் சொத்துமதிப்பு அதிகம்.

எனினும்  சம்மந்திகளோடு ஒப்பிடும் போது முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு இரண்டு மடங்காக உள்ளது. அதாவது அவரின் சொத்து மதிப்பு ரூ.9.4 லட்சம் கோடியாகும். உலகளவில் பெரும் பணக்காரர்களில் 11-வது இடத்திலும் இந்திய அளவில் முதலிடத்திலும் முகேஷ் அம்பானி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!