300 ஏக்கர்.. 49 அறைகள்.. லண்டனில் அம்பானி வீட்டின் விலையைக் கேட்டா அசந்து போவீங்க..!

First Published Mar 23, 2024, 1:24 PM IST

லண்டணில் இருக்கும் முகேஷ் அம்பானியின் வீடு ஒரு வரலாற்று சிறப்பு மிக்க இடமாகும். அதுகுறித்து இப்போது பார்க்கலாம்.

முகேஷ் அம்பானி உலக பணக்காரர்களில் ஒருவரும், இந்தியாவின் நம்பர் 1 பணக்கார் ஆவார். இவருக்கு ஆகாஷ் அம்பானி, இஷா அம்பானி, ஆனந்த் அம்பானி என 3 பிள்ளைகள் உள்ளனர். 

இவர் தனது குடும்பத்துடன் மும்பையில் வசித்து வருகிறார். இவரது வீட்டின் பெயர் 'ஆண்டிலியா' ஆகும். இந்த வீட்டைத் தவிர முகேஷ் அம்பானிக்கு லண்டனிலும் வீடு ஒன்று உள்ளது. 
 

பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அடுத்து உலகளவில் இரண்டாவது மிக விலையுயர்ந்த வீடு என்றால் அது முகேஷ் அம்பானியின் வீடு தான்.

இதையும் படிங்க: முகேஷ் அம்பானி வீட்டில் 600 பணியாளர்கள்.. அவர்களுக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமா?

லண்டனில் இருக்கும் இந்த வீட்டை அவர் 592 கோடி ரூபாய்க்கு வாங்கியதாகக் கூறப்படுகிறது. இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க இடம் என்றே சொல்லலாம். இதற்கு முன்பு இந்த வீட்டில் கிங் சகோதரர்களான Chester, Hertford மற்றும் Witney ஆகியோர் வசித்து வந்தனர்.

இதையும் படிங்க: "அம்மாடியோ அம்பானி வீடு இவ்வளோ விலையா" அந்த வீடு கட்ட எத்தனை வருடங்கள் ஆனது தெரியுமா?

சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் இருக்கும் இந்த வீட்டில் 49 அறைகள், 5 நட்சத்திர ஹோட்டல்கள், 13 டென்னிஸ் மைதானங்கள், 3 உணவகங்கள் மற்றும் ஓய்வறைகள், ஒரு ஸ்பா மற்றும் உடற்பயிற்சி நிலையம் ஆகியவை உள்ளன.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!