Buthan Peyarchi Palan : புதன் பெயர்ச்சி.. இனி இந்த ராசிக்காரர்களுக்கு அமோக காலம் தான்..

First Published Apr 9, 2024, 7:35 PM IST

தற்போது புதன் சுக்கிரனுடனும், சூரியனுடனும் சேர்ந்து சஞ்சரிக்க உள்ளார். இதன் காரணமாக சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றம் ஏற்படும்

Mesha Rasi

மேஷ ராசியில் சஞ்சரித்து வந்த புதன் பகவான், கடந்த மார்ச் 26-ம் தேதி பின்னோக்கி நகர ஆரம்பித்தார். இந்த சூழலில் குரு பகவான் வக்ர நிலையில் கடந்த 8-ம் தேதி மீன ராசியில் நுழைந்துள்ளார். இதனால் புதன் சுக்கிரனுடனும், சூரியனுடனும் சேர்ந்து சஞ்சரிக்க உள்ளார். இதன் காரணமாக சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றம் ஏற்படும். அவை எந்தெந்த ராசிகள் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

mithuna Rasi

மிதுனம் :

இந்த புதன் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களுக்கு  மிகவும் அதிர்ஷ்டகரமானதாக இருக்கும். உங்கள் தொழிலில் மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்படும். புதிய வேலை தேடிக்கொண்டிருந்தவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். நிலம் தொடர்பான பிரச்சனைகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்கும். உங்கள் மனைவியின் ஆதரவால் வாழ்வில் மகிழ்ச்சியும் மன நிறைவும் உண்டாகும்.

Kadagam Rasi

கடகம் :

கடக ராசிக்காரர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சியால் தொழில் சம்மந்தமாக நல்ல செய்திகள் கிடைக்கும். உங்களின் கடின உழைப்பிற்கு நல்ல பலன் கிடைக்கும். பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு மட்டுமின்றி, உங்கள் பணிக்கு புதிய அடையாளமும் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். காதல் வாழ்க்கையில் இணக்கமான சூழல் இருக்கும்.

Kanni Rasi

கன்னி :

கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி சாதகமான மாற்றங்களையே கொடுக்கும். சமூகத்தில் உங்கள் மரியாதையும், கௌரவமும் அதிகரிக்கும். உங்கள் திறன்கள் அங்கீகரிக்கப்படும். வருமான வாய்ப்புகள் அதிகரிக்கும். தொழிலில் முன்னேற்றம் இருக்கும். வேலையில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். அரசு வேலைக்கு தயாராகும் மாணவர்களுக்கு அரசு வேலை கிடைக்கும்.

makaram rasi

மகரம் :

மகர ராசிக்காரர்களுக்கு இந்த புதன் பெயர்ச்சி பல நன்மைகளை கொடுக்க போகிறது. உங்கள் தொழிலில் புதிய வெற்றி கிடைக்கும். புதிய வேலை தேடுவோருக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். தொழில் தொடங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு இது சிறப்பான நேரம். கடின உழைப்பு நல்ல பலனை தரும். வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். உங்களின் முயற்சிக்கு குடும்பத்தினரின் முழு ஆதரவும் இருக்கும்.

Meenam Rasi

மீனம் :

மீன ராசிக்காரர்களுக்கும் இந்த புதன் பெயர்ச்சி நல்ல பலன்களையே கொடுக்கும். பல நாட்களாக நீடித்து வந்த குழப்பம் தீரும். மனதில் ஆன்மீக உணர்வு அதிகரிக்கும். குடும்பத்தில் இருக்கும் பிரச்சனைகளை படிப்படியாக தீர்க்க முடியும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தொழிலில் பல புதிய வாய்ப்புகள் உருவாகும். ஏற்கனவே நீங்கள் செய்த கடின உழைப்புக்கும் நல்ல பலன் கிடைக்கும். திருமணம் தடை பட்டு வந்தவர்களுக்கு தடைகள் நீங்கி நல்ல வரன் அமையும்.

click me!