பூட்டான் தபால் நிலையத்தில்.. மாளவிகா மோகனன் தங்கலான் கெட்டப்பில் இருக்கும் ஸ்டாம்ப்! வைரலாகும் புகைப்படம்!

First Published Mar 8, 2024, 4:54 PM IST

நடிகை மாளவிகா மோகனன், 'தங்கலான்' படத்தில் ஆராத்தி வேடத்தில் இருக்கும் போஸ்டர் ஸ்டாம்மபை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
 

Malavika mohanan

மலையாள நடிகையான மாளவிகா மோகனன், துல்கர் சல்மானுக்கு ஜோடியாக 2013-ஆம் ஆண்டு வெளியான 'பட்டம் போலே' என்கிற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர். இந்த படத்தை தொடர்ந்து, கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளிலும் நடிக்க வாய்ப்புகளை கைப்பற்றி நடிக்க துவங்கினார்.

பின்னர் தமிழில்... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இளம் இயக்குனர் கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் நடித்த, 'பேட்ட' படத்தில், சசிகுமாருக்கு ஜோடியாக நடித்தார். இவரது கதாபாத்திரம் இந்த படத்தில் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது. இதைத்தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தில் தளபதிக்கு ஜோடியாக நடித்தார்.

புஷ்பா 2, இந்தியன் 2 ஆகிய படங்களின் எதிர்பார்ப்பை மிஞ்சிய 'ஆடுஜீவிதம்'! புக் மை ஷோவில் மெர்சல் செய்த ரசிகர்கள்
 

Actress Shriya Saran

மாஸ்டர் படத்திற்கு பின்னர் தனுஷுக்கு ஜோடியாக இவர் நடித்த 'மாறன்' திரைப்படம் மிகப்பெரிய தோல்விப்படமாக அமைந்த நிலையில்... கூடுதல் கவனத்துடன் படங்களை தேர்வு செய்து தற்போது நடிக்க துவங்கியுள்ளார். அந்த வகையில், இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில், விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தில் காட்டுவாசி பெண்ணாக ஆராத்தி என்கிற வேடத்தில் நடித்துள்ளார்.
 

இது மிகவும் மர்மம் நிறைத்த மற்றும் மிகவும் வலுவான பெண்ணின் கதாபாத்திரம் என கூறப்படுகிறது. இந்நிலையில் மகளிர் தினத்தை முன்னிட்டு.. ஆராத்தி கதாபாத்திரத்தின் போஸ்டல் ஸ்டாப்பின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஜோதிகாவின் 'சைத்தான்' பட நிகழ்ச்சிக்கு ஸ்டைலிஷாக வந்த சூர்யா! பாலிவுட் ஹீரோஸ் கூட பக்கத்துல நிக்க முடியாது!

இந்த போஸ்டல் ஸ்டாம்ப் பற்றி தெரிவித்துள்ள மாளவிகா மோகனன், பூட்டானில் உள்ள உள்ளூர் தபால் நிலையத்தில்.. நீங்கள் விரும்பும் புகைப்படத்தை ஸ்டாம்பாக அச்சிட முடியும். எனவே நான் தங்கலான் ரிலீஸ்  மிக அருகில் இருப்பதால், ‘ஆரத்தி’ கேரக்டரின் நினைவாக இந்த ஸ்டாம்ப்பை அச்சிடும் வாய்ப்பை பெற்றேன்.

மேலும் இந்த ஆண்டு பெரிய திரையில் நீங்கள் காணப்போகும்,  பயங்கரமான மற்றும் சக்திவாய்ந்த பெண் கதாபாத்திரம் யாராக இருக்க போகிறார். இந்த நாளில் உங்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறி அணைத்து பெண்களுக்கும் மகளிர் தன வாழ்த்துக்களை கூறியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

https://tamil.asianetnews.com/gallery/gallery/actress-samantha-ruth-prabhu-stunning-new-photoshoot-for-femina-india-mma-s9zmc5

click me!