மாவீரன் முதல் மாமன்னன் வரை... ஆயுதபூஜை ஸ்பெஷலாக டிவியில் போட்டிபோட்டு ஒளிபரப்பாக உள்ள புது படங்கள்- லிஸ்ட் இதோ

First Published Oct 22, 2023, 9:39 AM IST

ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி விடுமுறையில் சின்னத்திரையில் ஒளிபரப்பாக உள்ள புத்தம் புது தமிழ் படங்களின் பட்டியலை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ayudha pooja and vijayadashami special movies

பண்டிகை தினங்கள் என்றாலே புத்தம் புது படங்கள் ரிலீஸ் ஆவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படம் தியேட்டரில் வெளியாகி வெற்றிநடைபோட்டு வருகிறது. அதேபோல் இந்த பண்டிகை தினங்களில் சின்னத்திரையிலும் புதுப்புது படங்கள் ஒளிபரப்பப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி விடுமுறைக்கு டிவியில் ஒளிபரப்பாக உள்ள படங்களின் பட்டியலை பார்க்கலாம்.

சன் டிவி

சன் டிவியில் ஆயுத பூஜை தினத்தன்று வருகிற 23-ம் தேதி காலை 11 மணிக்கு சூர்யா நடித்த சிங்கம் 2 திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. அதேபோல் அன்று மதியம் 2.30 மணிக்கு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த உனக்கும் எனக்கும் படமும், மாலை 6.30 மணிக்கு சிவகார்த்திகேயனின் மாவீரன் படமும் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

24-ம் தேதி விஜயதசமி தினத்தன்று, காலை 11 மணிக்கு ரஜினியின் பிளாக்பஸ்டர் ஹிட் திரைப்படமான பேட்ட படமும், அன்று பிற்பகல் 3.30 மணிக்கு வடிவேலு ஹீரோவாக நடித்த நாய்சேகர் ரிட்டன்ஸ் ஆகிய திரைப்படங்கள் ஒளிபரப்பப்பட உள்ளது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

விஜய் டிவி

விஜய் டிவியில் ஆயுத பூஜை ஸ்பெஷலாக உதயநிதி ஸ்டாலின், வடிவேலு நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன மாமன்னன் திரைப்படம் வருகிற 23-ந் தேதி காலை 10.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. அதேபோல் விஜயதசமி அன்று காலை 10.30 மணிக்கு மணிகண்டனின் சூப்பர் ஹிட் பேமிலி எண்டர்டெயினர் படமான குட்நைட் ஒளிபரப்பாக உள்ளது.

ஜீ தமிழ்

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஆயுத பூஜை தினத்தன்று காலை 10.30 மணிக்கு அருண் விஜய், பிரியா பவானி சங்கர் நடித்த யானை திரைப்படம் ஒளிபரப்பப்பட உள்ளது. அன்று மதியம் 1.30 மணிக்கு சந்தானத்தின் சமீபத்திய ஹிட் படமான டிடி ரிட்டன்ஸ் ஒளிபரப்பாக உள்ளது. அதேபோல் விஜயதசமி அன்று பிற்பகல் 3.30 மணிக்கு சத்யராஜ், அஜ்மல் நடித்த தீர்க்கதரிசி திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.

கலைஞர் டிவி

ஆயுத பூஜை அன்று வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படம் மதியம் 1.30 மணிக்கும், பிரதீப் ரங்கநாதன் இயக்கி ஹிட் கொடுத்த லவ் டுடே திரைப்படம் அன்றைய தினம் மாலை 6 மணிக்கும் ஒளிபரப்பாக உள்ளது. அதேபோல் விஜயதசமி அன்று பிற்பகல் 1.30 மணிக்கு ஜெயம் ரவியின் அகிலன் திரைப்படம் ஒளிபரப்பப்பட உள்ளது.

இதையும் படியுங்கள்...  2ம் நாளில் டிராப்... 3ம் நாளில் டாப்! பாக்ஸ் ஆபிஸில் பதுங்கி பாயும் லியோ... மூன்றே நாளில் இத்தனை கோடி வசூலா?

click me!