குக் வித் கோமாளியை இழுத்து மூடிவிட்டு... சூப்பர் ஹிட் ஷோவை கையிலெடுத்த விஜய் டிவி - அப்போ டிஆர்பி எகிறப்போகுது

First Published Mar 12, 2024, 1:05 PM IST

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டதை தொடர்ந்து சூப்பர் ஹிட் ஷோவை களத்தில் இறக்கி இருக்கிறது விஜய் டிவி.

cook with comali

விஜய் டிவியில் ரசிகர்களின் மனம் கவர்ந்த ரியாலிட்டி ஷோக்களில் குக் வித் கோமாளியும் ஒன்று. கொரோனா லாக்டவுன் சமயத்தில் மக்களுக்கு ஸ்ட்ரெஸ் பஸ்டராக இருந்தது இந்நிகழ்ச்சி தான். இந்நிகழ்ச்சி இதுவரை நான்கு சீசன்கள் முடிவடைந்துள்ளன. இதன் முதல் சீசனில் வனிதா விஜயகுமார் டைட்டில் வின்னர் ஆனார். இரண்டாவது சீசனில் கனியும், மூன்றாவது சீசனில ஸ்ருதிகாவும் டைட்டில் ஜெயித்தனர். கடந்தாண்டு நடந்து முடிந்த நான்காவது சீசனில் மைம் கோபி வெற்றி பெற்றார்.

cook with comali issue

வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சி நிறைவடைந்ததும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஆரம்பமாகும், அந்த வகையில் இந்த ஆண்டும் பிக்பாஸ் முடிந்ததும் குக் வித் கோமாளிக்கு பதிலாக ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியை ஆரம்பித்தனர். பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்க தாமதம் ஆகும் என கூறப்பட்டு வந்த நிலையில், அந்நிகழ்ச்சியில் இருந்து ஒவ்வொருவராக வெளியேறத் தொடங்கினர். முதலில் அந்நிகழ்ச்சியில் நடுவர்களாக இருந்த வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமு ஆகியோர் வெளியேறினர்.

இதையும் படியுங்கள்... சந்தானம் படத்துக்கு இவ்வளவு டிமாண்டா? ஒரே நேரத்தில் இரண்டு ஓடிடி தளங்களில் ரிலீஸ் ஆன வடக்குப்பட்டி ராமசாமி..!

Ma Ka Pa Anand

அடுத்ததாக அந்நிகழ்ச்சியை நடத்திய மீடியா மேன்சன்ஸ் நிறுவனம் வெளியேறியது. இறுதியாக அந்நிகழ்ச்சியின் இயக்குனர் பார்த்திவ் மணி வெளியேறுவதாக அறிவித்தார். இப்படி அடுத்தடுத்து பலர் வெளியேறியதால் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொடங்குவது தற்போதைக்கு சாத்தியம் இல்லை என கூறப்படுகிறது. இதனால் அந்நிகழ்ச்சியை இழுத்து மூடிவிட்டு, மக்களின் மனம் கவர்ந்த காமெடி நிகழ்ச்சியை மீண்டும் புது சீசனுடன் கொண்டு வர முடிவு செய்துள்ளார்.

Adhu Idhu Yethu

அந்த வகையில் மா கா பா ஆனந்த் தொகுத்து வழங்க விரைவில் அலப்பறையாக ஆரம்பம் ஆக உள்ளது அது இது எது நிகழ்ச்சி. சிவகார்த்திகேயன் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் தான் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனார். பின்னர் மா கா பா தொகுத்து வழங்கினார். சுமார் 10 ஆண்டுகள் ஒளிபரப்பான இந்நிகழ்ச்சி கடந்த 2019-ம் ஆண்டு நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது புது சீசன் உடன் விரைவில் அலப்பறையாக ஆரம்பமாக உள்ளது. இதனால் விஜய் டிவியின் டிஆர்பியும் எகிறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்...  இப்படி ஒரு அடிபொலியான சீனை மிஸ் பண்ணிருக்காங்களே... மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குனர் மறைத்த உண்மை

click me!