Thalaivar 171 Title : ஆஹா இது வில்லங்கமான டைட்டில் ஆச்சே... லீக்கானது ரஜினியின் ‘தலைவர் 171’ பட தலைப்பு?

First Published Apr 1, 2024, 8:32 AM IST

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள தலைவர் 171 படத்துக்கு வைக்கப்பட்டுள்ள தலைப்பு குறித்த தகவல் கசிந்துள்ளது.

rajinikanth

லியோ படத்தின் வெற்றிக்கு பின்னர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக உள்ள படம் தலைவர் 171. இப்படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஹீரோவாக நடிக்க உள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்க உள்ளது. இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். ஸ்டண்ட் பணிகளை அன்பறிவு மேற்கொள்ள உள்ளனர். இப்படத்தின் மூலம் ரஜினியும் லோகேஷ் கனகராஜும் முதன்முறையாக இணைந்து பணியாற்ற உள்ளனர்.

Rajinikanth, lokesh kanagaraj

தலைவர் 171 படம் எல்சியூ-வில் இல்லை என்பதை உறுதிப்படுத்திய லோகேஷ் கனகராஜ், இதில் ரஜினியை இதுவரை பார்த்திராத ஒரு கேரக்டரில் பார்ப்பீர்கள் என்றும் உறுதிபட கூறியுள்ளார். மேலும் இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் வில்லனாகவும் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சமீபத்தில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. அதில் நடிகர் ரஜினிகாந்த் கையில் விலங்கு போல வாட்சுகளை மாட்டுக்கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.

இதையும் படியுங்கள்... சேவையே கடவுள்... இளைஞர் சிவசக்திக்கு ராகவா லாரன்ஸ் செய்த உதவி... குவியும் பாராட்டு!

Thalaivar 171

மேலும் பின்னணியில் டைம் மிஷன் போன்ற செட் அப் இருந்ததால், இது டைம் டிராவல் பற்றிய படமாக இருக்கும் என யூகங்கள் பரவத் தொடங்கின. ஆனால் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இது டைம் டிராவல் படம் இல்லை என்பதை உறுதிபட தெரிவித்த லோகேஷ், உங்கள் கற்பனைக்கு அப்பாற்பட்ட படமாக தலைவர் 171 படம் நிச்சயம் இருக்கும் என்று கூறினார். அதுமட்டுமின்றி இப்படத்தில் போதைப்பொருள் கடத்தலும் இடம்பெறாது என அவர் ஹிண்ட் கொடுத்துள்ளார்.

Thalaivar 171 title leaked

இப்படி ஒருபக்கம் தலைவர் 171 பட கதை என்னவாக இருக்கும் என யூகங்கள் பரவிய வண்ணம் இருக்க. மறுபுறம் அப்படத்தின் டைட்டில் இணையத்தில் கசிந்துள்ளது. அதன்படி தலைவர் 171 படத்துக்கு கழுகு என பெயரிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விஜய் - ரஜினி ரசிகர்கள் இடையேயான காக்கா, கழுகு பஞ்சாயத்து தற்போது ஓய்ந்துள்ள நிலையில், இந்த வில்லங்கமான டைட்டிலை வைத்தால் மீண்டும் இரு தரப்பு ரசிகர்கள் இடையே மோதல் வெடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

thalaivar 171 title kazhugu

அதுமட்டுமின்றி இது பான் இந்தியா படமாக உருவாக உள்ளதால், கழுகின் ஆங்கில பெயரான ஈகிள் என்பதும் இப்படத்துக்கு வைக்கப்பட்ட சான்ஸ் இருப்பதாக சொல்லப்படுகிறது. நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஏற்கனவே கடந்த 1981-ம் ஆண்டு கழுகு என்கிற தலைப்பில் ஒரு படம் வெளியாகி உள்ளது. ஆனால் அப்படம் பிளாப் ஆனது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... அரச குடும்பத்தில் மருமகனாகப் போகும் சித்தார்த்! அதிதியுடன் காதல் மலர்ந்த கதை இதுதான்!

click me!