3 படம் பிளாப் ஆனதற்கு அனிருத்தின் பாட்டு தான் காரணமா? புது குண்டை தூக்கிப்போட்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

First Published Feb 10, 2024, 2:27 PM IST

தனுஷ் நடிப்பில் கடந்த 2012ம் ஆண்டு திரைக்கு வந்த 3 திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாததற்கான காரணத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூறி உள்ளார்.

Aishwarya Rajinikanth

இயக்குனர் செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணியாற்றி, பின்னர் சினிமாவில் இயக்குனராக காலடி எடுத்து வைத்தவர் தான் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். அவர் இயக்கிய முதல் படம் 3. கடந்த 2012-ம் ஆண்டு ரிலீஸ் ஆன இப்படத்தில் தனுஷ் நாயகனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்திருந்த இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து இருந்தார். அவர் முதன்முதலில் இசையமைத்த படமும் இதுதான்.

dhanush anirudh aishwarya

3 படம் ரிலீஸுக்கு முன்னர் பரபரப்பாக பேசப்பட்டது. இதற்கு காரணம் அப்படத்தில் இடம்பெற்ற ஒய் திஸ் கொலவெறி பாடல் தான். அப்பாடல் ரிலீஸ் ஆன ஒரே நாளில் உலகளவில் வைரல் ஆனது. அந்த சமயத்தில் யூடியூப்பில் அதிகம் பார்க்கப்பட்ட பாடலாகவும் அது இருந்தது. அப்பாடலை தனுஷ் பாடி இருந்தார். அனிருத் இசையமைத்த முதல் பாடலும் இதுதான். கொலவெறி பாடலின் வெற்றியால் 3 படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது.

3 movie

ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அப்படம் பூர்த்தி செய்யாத காரணத்தால் அந்த சமயத்தில் 3 தோல்வி படமாகவே அமைந்தது. இருப்பினும் அப்படத்தில் வரும் காதல் காட்சிகளுக்காவே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அன்றைக்கு தோல்வி அடைந்த இப்படம் அண்மையில் ரீ-ரிலீஸ் ஆகி ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், அப்படத்தின் இயக்குனர் ஐஸ்வர்ய ரஜினிகாந்த், 3 படத்தின் தோல்வி பற்றி முதன்முறையாக பேசி உள்ளார்.

இதையும் படியுங்கள்... இவர் இயக்குனர் மட்டுமல்ல.. டப்பிங், சிங்கிங் என்று கலக்கியுள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த் - சில சுவாரசிய தகவல்கள்!

Aishwarya Rajinikanth about 3 movie failure

அதன்படி 3 படத்தின் தோல்விக்கு கொலவெறி பாடலும் ஒரு காரணம் என அவர் கூறி இருக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது : “கொலவெறி பாடல் இவ்வளவு வைரல் ஆனதற்கான காரணம் எங்களுக்கும் தெரியாது. அந்த பாடல் ஹிட் ஆனது படத்துக்கு மிகப்பெரிய அழுத்தத்தை கொடுத்தது. என்னைப்பொறுத்தவரை அந்த பாடலின் வெற்றி சர்ப்ரைஸ் அல்ல ஷாக் தான். நான் படமா சொன்னது வேற, ஆனா அந்த பாட்டு வந்ததும் அது படத்தையே தூக்கி சாப்ட்ருச்சு. அந்த பாட்டு எல்லாத்தையும் over shadow பண்ணீருச்சுனு எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது.

Moonu Movie

சீரியஸான ஒரு படம் பண்ணிக்கொண்டிருந்த டைம் அது. படத்தின் ரீ-ரிலீஸ் ஆனபோதும் டிவியில் ஒளிபரப்பான போதும் வந்த போன் கால்கள் படம் ரிலீஸ் ஆனப்போ எனக்கு வரல. ஒய் திஸ் கொலவெறி பாடல் படத்துக்கு எந்தவிதத்திலும் உதவவில்லை. ஆனா நிறைய பேரின் வாழ்க்கைக்கு அது உதவி இருக்கிறது. அது நல்ல விஷயம் தான். ஒரு இயக்குனரா இப்போ மக்கள் பாராட்டும்போது ஹாப்பியா இருக்கு, ஆனா ரிலீஸ் டைம்லயே அதை செய்திருந்தால் தயாரிப்பாளருக்கும் மகிழ்ச்சியாக இருந்திருக்கும்” என ஐஸ்வர்யா கூறி உள்ளார்.

இதையும் படியுங்கள்... ஐஸ்வர்யா என்னுடைய 2-வது தாய்... தன்னுடைய சிங்கப்பெண்கள் பற்றி பேசி கண்கலங்கிய ரஜினிகாந்த்

click me!