குஷி முதல் கிக் வரை.. செப்டம்பர் 1-ந் தேதி மட்டும் அரை டஜன் படங்களை இறக்கிவிடும் தமிழ் சினிமா- முழு லிஸ்ட் இதோ

First Published Aug 31, 2023, 12:11 PM IST

ஆகஸ்ட் மாதம் முழுக்க ஜெயிலர் ஆதிக்கம் செலுத்திய நிலையில், அப்படத்திற்கு டஃப் கொடுக்க செப்டம்பர் 1-ந் தேதி ஏராளமான திரைப்படங்கள் திரைக்கு வர உள்ளன.

Tamil movies released on september 1

ஆகஸ்ட் மாதம் முழுக்க ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் தான் திரையரங்குகளை ஆக்கிரமித்து இருந்தது. தற்போது ஜெயிலர் ஃபீவர் முடிவுக்கு வந்துள்ளதால், சிறு பட்ஜெட் படங்கள் வரிசைகட்டி ரிலீசாக உள்ளன. அதன்படி வருகிற செப்டம்பர் 1-ந் தேதி என்னென்ன திரைப்படங்கள் ரிலீஸ் ஆக உள்ளது என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

குஷி

சமந்தா - விஜய் தேவரகொண்டா நடிப்பில் பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ளது குஷி. இப்படத்தை ஷிவா நிர்வாணா இயக்கி உள்ளார். தெலுங்கில் உருவாகி உள்ள இப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு செப்டம்பர் 1-ந் தேதி திரைக்கு வர உள்ளது. தமிழ் நாட்டில் மட்டும் இப்படம் 200 திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

கிக்

டிடி ரிட்டன்ஸ் படத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிக்கு பின்னர் சந்தானம் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் தான் கிக். பிரசாந்த் ராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக தான்யா ஹோப் நடித்துள்ளார். நவீன் ராஜ் தயாரித்துள்ள இத்திரைப்படம் செப்டம்பர் 1-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.

லக்கி மேன்

யோகிபாபு கதையின் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் தான் லக்கி மேன். பாலாஜி வேணுகோபால் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்து உள்ளார். அதிர்ஷ்டத்தை தேடி ஓடும் ஒரு மனிதனைப்பற்றிய கதையை நகைச்சுவையுடன் சொல்லி உள்ள இப்படம் செப்டம்பர் 1-ந் தேதி திரைகாண உள்ளது.

இதையும் படியுங்கள்... மகன்களின் முகத்தை முதன்முறையாக காட்டி... இன்ஸ்டாகிராமில் இணைந்தார் நயன்தாரா - முதல் ஆளாக பாலோ பண்ணிய விக்கி

கருமேகங்கள் கலைகின்றன

தங்கர் பச்சான் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் தான் கருமேகங்கள் கலைகின்றன. இப்படத்தில் பாரதிராஜா, யோகிபாபு, கவுதம் வாசுதேவ் மேனன், அதிதி பாலன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஜிவி பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். இப்படமும் செப்டம்பர் 1-ந் தேதி திரைக்கு வர உள்ளது.

துடிக்கும் கரங்கள்

விமல் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் துடிக்கும் கரங்கள். இப்படத்தை வேலுதாஸ் இயக்கி உள்ளார். இப்படத்தில் விமலுக்கு ஜோடியாக மிஷா நரங் நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் ஆக்‌ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார் விமல். துடிக்கும் கரங்கள் திரைப்படம் செப்டம்பர் 1-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

பரம்பொருள்

அமிதாஷ் மற்றும் சரத்குமார் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் தான் பரம்பொருள். அரவிந்த் ராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். இப்படமும் செப்டம்பர் 1-ந் தேதி திரைகாண உள்ளது.

ரங்கோலி

வாலி மோகன் தாஸ் இயக்கிய திரைப்படம் ரங்கோலி. பள்ளிப் பருவ காதலையும், நட்பையும் மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்தில் புதுமுகங்கள் நடித்துள்ளனர். இப்படமும் செப்டம்பர் 1-ந் தேதி திரைக்கு வர உள்ளது.

இதையும் படியுங்கள்... இன்று மங்காத்தா டே.. வெற்றியை கொண்டாடும் இயக்குனர் வெங்கட் - இந்த படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

click me!