Kushboo Flying kiss Fahadh: பகத் பாசிலுக்கு ஃபிளையிங் கிஸ் கொடுத்த குஷ்பு...பொது மேடையில் பரபரப்பு பேட்டி ...

First Published Jun 4, 2022, 11:33 AM IST

Kushboo Flying kiss Fahadh: பகத் பாசிலுக்கு ஃபிளையிங் கிஸ் கொடுத்து, குஷ்பு பேசிய வீடியோ இணையத்தில் செம்ம வைரலாக பரவி வருகிறது. 

kushboo

பன்முகத்தன்மை கொண்ட நடிகை குஷ்பு அரசியல், தொழில் முனைவர், தயாரிப்பாளர், சீரியல் நடிகை என்று பல வித அவதாரங்களை எடுத்த பிஸியாக வலம் வருகிறார்.  ஒரு காலத்தில் தனது அழகு, திறமை, நடிப்பு, நடனம் ஆகியவற்றால் பல மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக கொடி கட்டி பறந்தவர்.

kushboo

தமிழ் சினிமாவின்  தனக்கென தனி அடையாளம் பெற்று பான்-இந்தியா நடிகை லிஸ்டில் இடம்பிடித்துள்ளார். கார்த்திக், கமல்ஹாசன், பிரபு, ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ் எனப் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். அதுமட்டுமின்றி, தனுஷ் போன்ற இளம்தலைமுறை நடிகர்களுடனும் இவர் இணைந்து நடித்துள்ளார். தமிழ் ரசிகர்கள், எந்த நடிகைக்கும் இல்லாத பெருமையாக குஷ்புவுக்கு மட்டும் தான் கோவில் கட்டியிருக்கின்றனர். 

kushboo

இரண்டு தலைமுறை நடிகர்களோடு நடித்து, இன்னும் மூன்றாவது தலைமுறை நடிகர்களோடு நடித்துக் கொண்டிருக்கும் குஷ்பு, கடைசியாக  ‘சிறுத்தை’ சிவா இயக்கி வரும் ‘தலைவர்168’ படத்தின் மூலம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரஜினியுடன் சேர்ந்து நடித்திருந்தார்.. அதே போல, சமீப காலமாக உடல் எடையை குறைத்து சின்னத்திரையிலும் தனது பங்களிப்பை தந்து கொண்டிருக்கிறார்.  

இந்நிலையில், கமல் நடிப்பில், லோகேஷ் இயக்கத்தில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு பிறகு நேற்று பிரமாண்டமான வெளியான விக்ரம் படத்தை திரையரங்கில் சென்று பார்த்த குஷ்பு அது குறித்து தனது கருத்தை செய்தியாளர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார். 

Kushboo

அதில் அவர், ஒரு முழு எண்டர்டைமென்ட் படம் பார்க்கணுமுன்னா விக்ரம் வாங்க. கமல் நடிப்பை ரசிங்க. விஜய் சேதுபதியை நல்லா திட்டுங்க..பகத் பாசிலுக்கு  ஃபிளையிங் கிஸ் கொடுத்துட்டு போங்க. இந்த மனுஷன் இயற்கையாகவே நல்லா நடித்துள்ளார். ''ஷோ கியூட்'' என்று என்று புகழ்ந்து தள்ளியுள்ளார். இதற்போது இது தொடர்பான வீடியோ இணையத்தில் செம்ம வைரலாக பரவி வருகிறது. 

 மேலும் படிக்க....Pathala Pathala song: பத்தல பத்தல பாடலின் முக்கிய வரிகள் நீக்கம்...அரசியலை மறைமுகமான சுட்டிக்காட்டினாரா கமல்?

click me!