46 வயது வரை முரட்டு சிங்கிளாக இருந்த ரெடினை காதலித்து கரம்பிடித்த சங்கீதா - லவ் ஜோடியின் வெட்டிங் கிளிக்ஸ் இதோ

First Published Dec 11, 2023, 12:08 PM IST

சீரியல் நடிகை சங்கீதாவும், காமெடி நடிகர் ரெடின் கிங்ஸ்லியும் காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், அவர்களின் திருமண புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.

redin kingsley sangeetha wedding

கோலிவுட்டில் தற்போது ஹாட் டாப்பிக் ஆக இருப்பது ரெடின் கிங்ஸ்லி - சங்கீதா திருமணம் தான். இருவருமே நேற்று மைசூரில் திடீரென திருமணம் செய்துகொண்டது சோசியல் மீடியாவில் பரவலாக பேசப்பட்டது. முதலில் இவர்களது திருமண புகைப்படம் வெளியானபோது அது ஏதாவது பட ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்டதாக இருக்கும் என பலரும் எண்ணினர்.

redin kingsley wife saangeetha

பின்னர் ரெடின் கிங்ஸ்லியின் நண்பரான நடன இயக்குனர் சதீஷ் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் இது உண்மையான திருமணம் தான் என பதிவிட்டபின்னர் தான் அது ரியல் என்று அனைவருக்கும் தெரியவந்தது. பின்னர் சங்கீதா - ரெடின் கிங்ஸ்லி ஜோடிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

Latest Videos


redin kingsley marriage photos

ரெடின் கிங்ஸ்லி தமிழ் திரையுலகில் நடன கலைஞராக பல படங்களில் பணியாற்றி இருந்தாலும் அவருக்கு அடையாளம் கொடுத்தது இயக்குனர் நெல்சன் தான். அவரின் கோலமாவு கோகிலா படத்தின் டோனியாக நடித்ததன் மூலம் பேமஸ் ஆன ரெடின், பின்னர் டாக்டர், பீஸ்ட், ஜெயிலர் என அவரின் படங்களில் நடித்து தன் நகைச்சுவையால் ரசிகர்களை வயிறுகுலுங்க சிரிக்க வைத்தார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

redin kingsley wedding photoshoot

தற்போது தமிழ் சினிமாவில் யோகிபாபுவுக்கு அடுத்தபடியாக டாப் காமெடியனாக வலம் வந்து கொண்டிருக்கிறார் ரெடின். அவரின் மனைவியான சங்கீதாவும் சினிமா மற்றும் சீரியல்களில் நடித்து வருகிறார். குறிப்பாக சீரியல்களில் வில்லி கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானார் சங்கீதா.

redin kingsley sangeetha candid clicks

ரெடின் கிங்ஸ்லி, சங்கீதா இருவருமே பல வருடங்களாக காதலித்து வந்ததாக நடன இயக்குனர் சதீஷ் பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார். 46 வயது வரை முரட்டு சிங்கிளாக இருந்து வந்த ரெடின் கிங்ஸ்லி தற்போது திருமணம் செய்துகொண்டதால் அவரது குடும்பத்தினரும் மிகுந்த சதோஷத்தில் உள்ளார்களாம்.

redin kingsley sangeetha couple photoshoot

ரெடின் கிங்ஸ்லி - சங்கீதா ஜோடியின் திருமணம் மைசூரில் வைத்து நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் குடும்பத்தினரும், நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். திருமணத்துக்கு பின்னர் ரெடின் கிங்ஸ்லியும், சங்கீதாவும் ஜோடியாக எடுத்துக்கொண்ட ரொமாண்டிக் போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

இதையும் படியுங்கள்... நயன்தாராவே புரமோஷன் செஞ்சும் வேலைக்கு ஆகல.. அன்னபூரணியை புரட்டி எடுத்த புது படங்கள் - பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ

click me!