மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி.. சக நடிகர் ஆரவுக்கு பைக் பரிசளித்த தல அஜித்? தீயாய் பரவும் தகவல்!

First Published Apr 9, 2024, 4:03 PM IST

Thala Ajith : துணிவு திரைப்படத்தை தொடர்ந்து, அடுத்தபடியாக தல அஜித் நடித்து வரும் திரைப்படம் தான் விடாமுயற்சி. விரைவில் இப்படத்தின் பணிகள் முடிவடைய உள்ளது.

Thirumeni

பிரபல இயக்குனர் வினோத் இயக்கத்தில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான "துணிவு" திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், அதை தொடர்ந்து தல அஜித் தனது பைக் பயணத்தை தொடர்ந்தார். இடையில் தனது புதிய பைக் டூரிங் ஏஜென்சி ஒன்றயும் அவர் திறந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிரபல இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் "விடாமுயற்சி" என்கின்ற திரைப்படத்தில் அவர் நடிக்க தொடங்கினார்.

Lokesh : "அச்சம் தவிர் முதல் தலைவர் 171 வரை" - தனக்கென தனி ரசிகர் கூட்டம் - கெத்தாக வலம் வரும் லோகேஷ் கனகராஜ்!

Vidaamuyarchi

இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல நடிகர் அர்ஜுன் மற்றும் பிக் பாஸ் புகழ் ஆரவ் ஆகியோர் நடிக்க, அஜர்பைஜான் என்கின்ற நாட்டில் தொடர்ச்சியாக இப்படப் பணிகள் நடைபெற்று வருகிறது. ஏறத்தாழ 60 சதவிகித பட பணிகள் முடிந்துள்ள நிலையில், ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் முடிந்ததும் அஜித் மீண்டும் விடாமுயற்சி பணிகளை துவங்குகிறார்.

Thala ajith

சில தினங்களுக்கு முன்பு இந்த பட, படப்பிடிப்பின் போது நடிகர் ஆரவ் மற்றும் தல அஜித் ஆகிய இருவரும் ஒரு விபத்தில் சிக்கிய வீடியோ வைரல் ஆனது. ஆனால் நல்வாய்ப்பாக அதில் யாருக்கு பெரிய அளவில் காயங்கள் ஏற்படவில்லை. இந்த சூழ்நிலையில் தல அஜித் அவர்கள் தன்னுடன் இணைந்து பணியாற்றி வரும் சக நடிகனான ஆரவிற்கு ஒரு புதிய பைக்கை பரிசளித்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர் தகவல்கள் வெளியாகவில்லை.

"இது அப்பாவோட பரிசு".. நடிகர் பிரஷாந்துக்கு காஸ்ட்லி BMW கார் கொடுத்த தந்தை - அதன் விலை எவ்வளவு தெரியுமா?

click me!