கல்யாணம் குறித்த கேள்விக்கு கியாரா அத்வானியின் பளிச் பதில்...உறவு குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி ...

First Published May 23, 2022, 1:19 PM IST

Kiara Advani Marriage Plans: பாலிவுட்டில் பிஸியான நடிகையாக வலம் வரும் கியாரா அத்வானி, தனது திருமணம் மற்றும் உறவு குறித்த பத்திரிகையாளர் கேள்விக்கு பளிச் பதில் அளித்துள்ளார். 

kiara advani

தெலுங்கில் கடந்த 2014இல் வெளிவந்த புக்லி திரைப்படத்தின் சினிமாவில் அறிமுகமானவர். இதையடுத்து, இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தேடி வர எம். எஸ். தோனி, லஸ்ட் ஸ்டோரிஸ் மற்றும் தெலுங்கு அரசியல் படமான பரத் அனே நேனு போன்ற படங்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி உள்ளார். 

kiara advani

கியாரா அத்வானி, நடிகர் ராம் சரண் உடன் "வினயா வித்யா ராமா" என்ற ஒரு தெலுங்கு படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வெற்றிபெற்ற திரைப்படமாக அமைந்தது. இதையடுத்து, இவருக்கு பாலிவுட் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் தெலுங்கு திரையுலகிலிருந்து விலகினார். பாலிவுட் திரையுலகிற்கு சென்ற பிறகு கவர்ச்சி கொஞ்சம் தூக்கலாக காட்ட ஆரம்பித்து விட்டார்.

kiara advani

இதையடுத்து, இவரை ரசிகர் பட்டாளம் சூழ்ந்து கொண்டது. இவர் சினிமா மட்டுமின்றி, இந்தியில் வெப் சீரிஸில் மிகவும் துணிச்சலான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் பாலிவுட்டில் கலக்கி வருகிறார். 

kiara advani

இந்த நிலையில், தற்போது,  கியாரா அத்வானி பிரபல இயக்குநர் ராஜ் மேத்தா இயக்கத்தில், ''ஜக் ஜக் ஜீயோ'' என்ற படத்தில்  நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் இவருடன் வருண் தவான், அனில் கபூர் மற்றும் நீது கபூர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படம் வரும் ஜூன் 24 ம் தேதி வெளியாகவுள்ளது.

kiara advani

இந்த நிலையில், ஜக் ஜக் ஜீயோ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா இன்று பல்வேறு நட்சத்திர நடிகர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டது. அப்போது, விழாவில் நடிகர்களிடம்  பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அதில், நடிகை கியாரா அத்வானியிடம் செட்டில் ஆகி திருமணம் செய்துகொள்ளும் திட்டம் குறித்து கேட்கப்பட்டது. 

kiara advani

அதற்கு அவர், "கல்யாணம் இல்லாம நல்லா செட்டில் ஆகலாம், சரியா? நல்லா செட்டில் ஆயிட்டேன்.. வேலை செஞ்சுகிட்டு இருக்கேன். சம்பாதிச்சு சந்தோஷமா இருக்கேன்" என்று நெத்தியடி பதில் அளித்தார். 

kiara advani

அதுமட்டுமின்று, கியாரா அத்வானி நீண்ட காலமாக சித்தார்த் மல்ஹோர்த்ராவுடன் என்பவருடன் ''லிவிங் டூ கெதர்'' உறவில் இருப்பதாக வதந்திகள் பரவி வருகின்றன. தற்போது இதற்கும் சேர்த்து கியாரா அத்வானி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். 

மேலும் படிக்க...Suriya: கேஜிஎஃப் பட பாணியில் சூர்யாவை இயக்கும் சிறுத்தை சிவா...அடுத்த அதிரடியாக வெளியான மாஸ் அப்டேட்....

click me!