Kushboo daughter in cinema: சினிமாவில் நடிக்க சின்ன குஷ்பு ரெடியாம்.? ட்விட்டரில் சேதி சொன்ன குஷ்பு சுந்தர் சி

First Published May 27, 2022, 1:04 PM IST

Kushboo daughter in cinema: நடிகை குஷ்பு அவரின் ட்விட்டர் பக்கத்தில், தனது மூத்த மகள் அனந்திதா விரைவில் சினிமாவில் நடிக்கவுள்ளார் என்று கூறியுள்ளார்.

kushboo

இந்தியில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான குஷ்பு( kushboo), தமிழ் சினிமாவின் தனக்கென தனி அடையாளம் பெற்று இன்று வரை முன்னணி நடிகையாக வலம் வருகிறார். கார்த்திக், கமல்ஹாசன், பிரபு, ரஜினிகாந்த், விஜயகாந்த், சத்யராஜ் எனப் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். அதுமட்டுமின்றி.  தனுஷ் போன்ற இளம்தலைமுறை நடிகர்களுடனும் இவர் இணைந்து நடித்துள்ளார்.

kushboo

குஷ்பு தமிழ் மட்டுமின்றி, தனது அழகு, திறமை, நடிப்பு, நடனம் ஆகியவற்றால் பல மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக கொடி கட்டி பறந்தவர். எந்த நடிகைக்கும் இல்லாத பெருமையாக குஷ்புவுக்கு மட்டும் தான் கோவில் கட்டியிருக்கின்றனர் தமிழ் ரசிகர்கள். 

khushsundar

கடைசியாக குஷ்பு, ‘சிறுத்தை’ சிவா இயக்கி வரும் ‘தலைவர்168’ படத்தின் மூலம் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரஜினியுடன் சேர்ந்து நடித்திருந்தார். பன்முகத்தன்மை கொண்ட நடிகை குஷ்பு சினிமா, அரசியல் இரண்டிலும் பிஸியாக வலம் வருகிறார். அதே போல, சமீப காலமாக உடல் எடையை குறைத்து சின்னத்திரையிலும் தனது பங்களிப்பை தந்து கொண்டிருக்கிறார்.  

khushsundar

இந்த நிலையில், மூன்றாவது தலைமுறை நடிகர்களோடு நடித்துக் கொண்டிருக்கும் நடிகை குஷ்பு அவரின் ட்விட்டர் பக்கத்தில், தனது மூத்த மகள் அனந்திதா விரைவில் சினிமாவில் நடிக்கவுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

kushboo

இது தொடர்பான ட்விட்டரில் பதிவிட்டுள்ள குஷ்பு  '' எனது மூத்த மகள் லண்டனில் உள்ள சிறந்த நடிப்பு பயற்சி பள்ளியில் தனது படிப்பை முடித்துவிட்டார். அடுத்ததாக அவர் சினிமாவில் தனது பயணத்தை துவங்க உள்ளார். அவரை நாங்கள் அறிமுகமோ அல்லது பரிந்துரையோ செய்யப்போவது இல்லை. நீங்கள் அனைவரும் அவரை வாழ்த்த வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார். தற்போது இவரின் இந்த பதிவிற்கு நெட்டிசன்கள் அம்மா போல ஜொலிப்பாரா..? என்றும் சிலர் வாழ்த்துக்கள் என்றும் பதிவிட்டுள்ளனர்.

மேலும் படிக்க....Vikram Movie OTT Date: படம் ரிலீஸே ஆகல கையோடு ஓடிடி அறிவிப்பும் வந்தாச்சு...! ஆகஸ்டில் விக்ரம் ஓடிடி ரிலீஸ்...

click me!