KGF Chapter 2: மே 6 முதல் ஓடிடியில் வெளியாகும் கே ஜி எஃப் 2 படம்...ரிலீஸ் தேதி கேட்டு குஷியான ரசிகர்கள்...

First Published Apr 30, 2022, 12:04 PM IST

KGF Chapter 2: யாஷ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிக பெரிய வரவேற்பை பெற்று தந்த கே ஜி எஃப் 2 திரைப்படத்தின் ஓடிடி ரீலீஸ் தேதி வெளியாகியுள்ளது.

KGF Chapter 2

யாஷ் - பிரசாந்த் நீல் கூட்டணியில் கடந்த ஏப்ரல் 14 ம் தேதி உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் கே.ஜி.எஃப் 2. முதல் பாகத்தை போன்று இரண்டாம் பாகமும் செம்ம மாஸாக இருப்பதால் இப்படத்திற்கு பாசிடிவ் விமர்சனங்களை பெற்று தந்துள்ளது. 

KGF Chapter 2

பான் இந்தியா படமான கேஜிஎஃப் 2 திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் பிரமாண்டமாக வெளியானது.

KGF Chapter 2

முழுக்க முழுக்க ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியுள்ள இந்த படத்தில், யாஸ்சுடன்  சேர்ந்து சஞ்சய் தத், ரவீனா டாண்டன் பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

KGF Chapter 2

உலகம் முழுவதும்  சுமார் 10,000 தியேட்டர்களுக்கு மேல் ரிலீஸ் செய்யப்பட்ட கேஜிஎஃப் 2 வின் ப்ரீ புக்கிங் கலெக்சன்ஸ் மட்டும் உலகம் முழுவதும் 56.6 கோடியை கடந்தது.

KGF Chapter 2

100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட கேஜிஎஃப் 2 படம் ரிலீசுக்கு முன்பே போட்ட பணத்தை விட பல மடங்கு அதிகமான லாபத்தை பெற்றுவிட்டது.

KGF Chapter 2

இதையடுத்து, தற்போது வரை இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது வருகிறது. இதனால், யாஷ்ஸின் ரசிங்கர்கள் படு கொண்டாட்டத்தில் உள்ளனர். 

KGF Chapter 2

இந்நிலையில், தற்போதைய புதிய தகவல் என்னவென்றால், கேஜிஎஃப் 2 படம் மே 6 ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

KGF Chapter 2

படம் வெளியாகி மூன்று வாரங்களுக்கு பின் ஓடிடியில் வெளியிடலாம் என்பதால், டிஜிட்டலிலும் லாபத்தை பிடிக்க அமேசான் நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த செய்தி கேட்டு ரசிகர்கள் குஷியாகியுள்ளனர். 

click me!