முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, பக்தர்களுடன் இணைந்து நடனமாடி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கோவை சுகுணாபுரம், மைல்கல் பகுதியில் எழுந்தருளியுள்ள பழம்பெருமை வாய்ந்த வேண்டும் வரம் தரும் சக்தி மாரியம்மன் திருக்கோவில் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக இன்று மாபெரும் திருவிளக்கு பூஜை நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், அதிமுக தலைமை நிலையச் செயலாளருமான எஸ்.பி.வேலுமணி, நல்லறம் அறக்கட்டளையின் தலைவரும் சமூக ஆர்வலருமான எஸ்.பி அன்பரசன், மற்றும் சகோதரர் செந்தில்குமார் ஆகியோர் குடும்பத்துடன் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
undefined
மேலும் திருவிளக்கு பூஜையை திருமதி வித்தியாதேவி வேலுமணி அவரது மகளுடன் இணைந்து குத்துவிளக்கு ஏற்றி துவக்கிவைத்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு பக்தி பரவசத்துடன் திருவிளக்கிற்கு சந்தனம், குங்குமம் இட்டு, மலர் தூவி, மனதார பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
பிரதமர் உண்மை கிலோ என்ன விலை என்று கேட்பார் என்று தோன்றுகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
அதைதொடர்ந்து முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, எஸ்.பி.அன்பரசன், சகோதரர் செந்தில்குமார் ஆகியோருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பாக பரிவட்டம் கட்டி முதல்மரியாதை அளிக்கப்பட்டது. அதன் பின்னர் பக்தர்களின் வேண்டுகோளை ஏற்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பக்தர்களுடன் இணைந்து ஜமாப் இசைக்கேற்றவாறு நடனமாடி அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். பொதுமக்கள் விசில் அடித்து உற்சாகப்படுத்தி அவருடன் இணைந்து நடனமாடி மகிழ்ந்தனர்.