எரிந்த நிலையில் உடல்! பெண்ணின் தலை எங்கே? சல்லடை போட்டு தேடி போலீஸ்! திகிலில் பழனி பொதுமக்கள்.!

Published : May 18, 2024, 11:31 AM ISTUpdated : May 18, 2024, 11:33 AM IST
எரிந்த நிலையில் உடல்! பெண்ணின் தலை எங்கே? சல்லடை போட்டு தேடி போலீஸ்! திகிலில் பழனி பொதுமக்கள்.!

சுருக்கம்

நேற்று மாலை ஆடு மேய்க்க சென்றவர்கள் சுடுகாடு பகுதியில் எரிந்த நிலையில் தலையில்லாத உடல் பகுதி எலும்பு கூடாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

பழனி அருகே தலை இல்லாத மனித உடலை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்து விட்டு சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கோரிக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட சுடுகாடு உள்ளது. இங்கு இறந்தவர்களை புதைப்பதற்கு மட்டுமே அனுமதி இருக்கிறது எரிக்கும் வழக்கம் கொண்டவர் இருந்தால் பழனியில் உள்ள நவீன எரிவாயு மயானத்தில் மட்டுமே உடலை தகனம் செய்ய முடியும் என்ற வழக்கம். 

இதையும் படிங்க: அரை குறை ஆடைகளுடன் சிக்கிய பெண்கள்! ஒரு நைட்டுக்கு எவ்வளவு தெரியுமா? கல்லா கட்டிய பிசினஸ்க்கு ஆப்பு!

இந்நிலையில் நேற்று மாலை ஆடு மேய்க்க சென்றவர்கள் சுடுகாடு பகுதியில் எரிந்த நிலையில் தலையில்லாத உடல் பகுதி எலும்பு கூடாக இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் தலை இல்லாத எலும்புக்கூடை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதையும் படிங்க:  என் பொண்டாட்டிய அபகரிச்சதும் இல்லாம என்னையே போட பாக்குறியா? கதவை உடைத்து ரவுடி படுகொலை! வெளியான பகீர் தகவல்!

மேலும் போலீசார் விசாரணையில் எரிந்த நிலையில் கண்டெடுக்கபட்ட எலும்புக்கூடு சிறுமியாக இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.  வேறொரு பகுதியில் இருந்து கொலை செய்துவிட்டு கோரிக்கடவு சுடுகாட்டில் தலையில்லாத உடல் பகுதியை தீ வைத்து மர்ம நபர்கள் எரித்துள்ளார்களா?  என்ற கோணத்தில் கீரனூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். பழனி அருகே தலையில்லாத எலும்புக்கூடு எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

ஒரே போன்கால்..! தேனி பேருந்து நிலையத்தில் குவிந்த போலீஸ்! கையும் களவுமாக சிக்கிய பிரசாத்! நடந்தது என்ன?
புதிய வகை ஆன்லைன் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் முதல் AI வாய்ஸ் வரை - தப்பிப்பது எப்படி?