எனக்கே துரோகம் பண்றியா? மனைவிக்கு நடுரோட்டில் அரிவாளால் வெட்டு! போலீசுக்கு பயந்து கணவர் செய்த காரியம்!

By vinoth kumar  |  First Published May 17, 2024, 11:08 AM IST

திருச்சி மாவட்டம் முசிறி அடுத்துள்ள அலகரை கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (53). கூலித் தொழிலாளி. இவரது மனைவி திலகவதி (45). கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த பணி தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார்.


திருச்சி அருகே மனைவி நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு கணவர் அரிவாளால் தலை, வயிறு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் முசிறி அடுத்துள்ள அலகரை கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (53). கூலித் தொழிலாளி. இவரது மனைவி திலகவதி (45). கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒப்பந்த பணி தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். இவர் வேலைக்கு சென்று வருவதால் அவரது நடத்தையில் பெருமாளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி  சண்டை ஏற்பட்டுள்ளது.

Tap to resize

Latest Videos

undefined

இதையும் படிங்க: என்ன ஒரு தைரியம் பாத்தியா? கிரிவலப் பாதையில் பெண் செய்த காரியம்! ரவுண்ட் கட்டிய பொதுமக்கள்.. நடந்தது என்ன? 

இந்நிலையில் நேற்று மாலை பணி முடித்து குளித்தலை சுங்ககேட்டில் பேருந்தில் இருந்து திலகவதி இறங்கியுள்ளார். அப்போது அங்கு காத்திருந்த அவரது கணவர் பெருமாள் திலகவதியிடம் வாய் தகராறில் ஈடுபட்டு மறைத்து வைத்திருந்த அரிவாளால் தலை, வயிறு உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பித்துள்ளார். 

இதையும் படிங்க:  தம்பியின் மாமியாரை மடக்கி உல்லாசம்! எவ்வளவு சொல்லியும் கேட்காமல் கள்ளக்காதலை விடாத அண்ணன்! இறுதியில் பயங்கரம்!

இந்த சம்பவத்தை அடுத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டதை கண்டு பயந்து பெருமாள் தன் கையில் வைத்திருந்த அரிவாளால் தனக்குத்தானே கழுத்தை அறுத்துக் கொண்டார். பின்னர் ரத்த வெள்ளத்தில் இருந்த கணவன், மனைவி இருவரையும் போலீசார் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து குளித்தலை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

click me!