பாண்டிச்சேரியில் வீக்-எண்டை கொண்டாடிய கீர்த்தி சுரேஷ்! தனது செல்லத்துடன் கொஞ்சி விளையாடும் க்யூட் கிளிக்ஸ் இதோ

First Published Apr 29, 2024, 9:00 AM IST

ரிவால்வர் ரீட்டா படத்தின் ஷூட்டிங்கிற்காக பாண்டிச்சேரி சென்றுள்ள நடிகை கீர்த்தி சுரேஷ், அங்கு தனது வீக் எண்ட் கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

keerthy suresh

தயாரிப்பாளர் சுரேஷ் மேனன் - நடிகை மேனகா ஜோடியின் மகளான கீர்த்தி சுரேஷ், தனது தாயாரை போல் சினிமாவில் ஹீரோயினாக கலக்கி வருகிறார். ஆரம்பத்தில் மலையாள படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், இது என்ன மாயம் படம் மூலம் கோலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமானார். பின்னர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரஜினிமுருகன் படத்தில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டியெங்கும் பேமஸ் ஆனார் கீர்த்தி.

keerthy suresh friends

ரஜினிமுருகன் படத்தின் வெற்றிக்கு பின்னர் ரெமோ படத்தில் மீண்டும் சிவகார்த்திகேயன் உடன் இணைந்த கீர்த்தி சுரேஷுக்கு படிப்படியாக விஜய்யுடன் பைரவா மற்றும் சர்க்கார், தனுஷுடன் தொடரி, விக்ரம் ஜோடியாக சாமி ஸ்கொயர், விஷாலின் சண்டக்கோழி 2 போன்ற பிரம்மாண்ட பட வாய்ப்புகள் கிடைத்தன.

keerthy suresh weekend photos

வரிசையாக கமர்ஷியல் படங்களில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், ஒரு சேஞ்சுக்காக தெலுங்கில் நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படமாக உருவான மகாநடியில் நடித்தார். அப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய நடிகை கீர்த்தி சுரேஷுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் கிடைத்தது. 

இதையும் படியுங்கள்... விஜய் டிவிக்கு போட்டியாக புது குக்கிங் ஷோ... வெங்கடேஷ் பட் தலைமையில் சன் டிவிக்கு தாவிய குக் வித் கோமாளி டீம்

keerthy suresh Pondicherry clicks

மகாநடி படத்தின் வெற்றிக்கு பின்னர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் அதிக கவனம் செலுத்து வருகிறார் கீர்த்தி. தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் கைவசம் தமிழில் ரிவால்வர் ரீட்டா மற்றும் ரகுதாதா போன்ற படங்களும், இந்தியில் பேபி ஜான் படமும் உள்ளது. இதில் பேபி ஜான் திரைப்படம் தமிழில் வெளிவந்த தெறி படத்தின் ரீமேக் ஆகும்.

keerthy suresh with her pet Nyke

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது ரிவால்வர் ரீட்டா படத்தின் படப்பிடிப்பிற்காக புதுச்சேரியில் முகாமிட்டுள்ளார். அங்கு வீக் எண்ட்டை தனது தோழிகள் மற்றும் செல்ல நாய்க்குட்டிகளுடன் ரெசார்ட்டில் கொண்டாடி மகிழ்ந்துள்ள கீர்த்தி சுரேஷ். வீக் எண்ட் கொண்டாட்டத்தின் போது எடுத்த க்யூட்டான புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

இதையும் படியுங்கள்... Coolie : கூலி டீசர்.. சர்ச்சையான வெங்கட் பிரபுவின் பதிவு.. ரஜினியை கலாய்த்தாரா VP? அவரே கொடுத்த விளக்கம்!

click me!