Keerthy: பாலிவுட் போனாலும் பாரம்பரியத்தை மறக்காத நடிகை கீர்த்தி சுரேஷின் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல் கிளிக்ஸ் இதோ

First Published Apr 15, 2024, 12:13 PM IST

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் புத்தாண்டு மற்றும் விஷு பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்து அழகிய போட்டோஷூட் ஒன்றையும் நடத்தி இருக்கிறார்.

நடிகை மேனகா - தயாரிப்பாளர் சுரேஷ் மேனன் ஆகியோரின் மகளான கீர்த்தி சுரேஷ், இது என்ன மாயம் படம் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக காலடி எடுத்து வைத்தார். இதையடுத்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அவர் நடித்த ரஜினி முருகன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதை தொடர்ந்து விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார் கீர்த்தி.

கோலிவுட்டை தொடர்ந்து டோலிவுட்டுக்கு தாவிய கீர்த்தி சுரேஷ், அங்கு மகாநடி என்கிற திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக தேசிய விருதை வென்றார். அதன்பின்னர் அவருக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. 

குறிப்பாக தமிழில் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தொடர்ந்து தேர்வு செய்து நடித்து வந்தார். தற்போது அவர் கைவசம் ரிவால்வர் ரீட்டா மற்றும் ரகுதாதா ஆகிய இரண்டு படங்கள் உள்ளன. இதில் ரகுதாதா படம் இந்தி எதிர்ப்பை மையமாக வைத்து உருவாகி உள்ளது. இந்த இரண்டு படங்களும் ரிலீசுக்கு காத்திருக்கின்றன.

இதையும் படியுங்கள்... அஜித்தின் மாமியார் இவங்க தானா? நடிகை நதியா போல் செம யங்கா இருக்காங்களே! போட்டோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்

தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து வந்த கீர்த்தியை அலேக்காக பாலிவுட்டுக்கு அழைத்து சென்றுவிட்டார் அட்லீ. அவர் தற்போது இந்தியில் பேபி ஜான் என்கிற திரைப்படத்தில் நடிகர் வருண் தவானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தை அட்லீ தான் தயாரித்து வருகிறார்.

பேபி ஜான் திரைப்படம் தமிழில் விஜய் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன தெறி படத்தின் இந்தி ரீமேக் ஆகும். தமிழில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்த கேரக்டரில் தான் தற்போது கீர்த்தி சுரேஷ் இந்தியில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

பாலிவுட் போனாலும் பாரம்பரியத்தை மறக்காத நடிகை கீர்த்தி சுரேஷ், தமிழ் புத்தாண்டு மற்றும் விஷு பண்டிகைக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளதோடு, அழகிய உடையில் தேவதை போல் ஜொலிக்கும் வகையில் போட்டோஷூட் நடத்தி அதன் புகைப்படங்களையும் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்களுக்கு லட்சக்கணக்கில் லைக்குகளும் குவிந்த வண்ணம் உள்ளன.

இதையும் படியுங்கள்... Vishal about Varalaxmi : வரலட்சுமியின் நிச்சயதார்த்தம் பற்றிய கேள்வி; ஒளிவு மறைவின்றி ஓப்பனாக பதிலளித்த விஷால்

click me!