Kollywood Movies : உலக நாயகனோடு மல்லுக்கட்ட தயாரான "அசுரன்" - ஜூன் மாதத்தை குறிவைக்கும் டாப் 3 படங்கள்!

First Published Apr 6, 2024, 8:21 PM IST

Kollywood Movies Releasing in June : ஜூன் மாதம் கோலிவுட் உலகில் மிகவும் எதிர்பார்க்கப்படும் 3 முக்கிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

Thangalaan

எதிர்வரும் ஜூன் மாதம் தமிழ் சினிமாவிற்கு ஒரு முக்கியமான மாதமாக பார்க்கப்படுகிறது. வெகு நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட விக்ரமின் "தங்கலான்" திரைப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று சில தகவல்கள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே பட குழு அறிவித்ததை போல தேர்தல் முடிவடைந்த பிறகு "தங்கலான்" வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Indian 2 Release Update: 'இந்தியன் 2' படத்தின் ரிலீஸ் எப்போது? மாஸ் அப்டேட் கொடுத்த லைக்கா நிறுவனம்!

Raayan

அதேபோல பிரபல நடிகர் தனுஷ் இயக்கத்தில் இரண்டாவது முறையாக உருவாகியுள்ள "ராயன்" திரைப்படமும் ஜூன் மாதம் வெளியாகும் என்று பெரிய அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தில் பிரகாஷ்ராஜ், எஸ் ஜே சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Indian 2

பல ஆண்டுகளாக உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுடைய ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வரும் "இந்தியன் 2" திரைப்படம் வருகின்ற ஜூன் மாதம் வெளியாகும் என்கின்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகி உள்ளது. ஆகவே தனுஷின் "ராயன்", விக்ரமின் "தங்கலான்" மற்றும் உலக நாயகனின் "இந்தியன் 2" ஆகிய மூன்று திரைப்படங்களும் களம் காண உள்ளது. ஆனால் இந்த மூன்று படங்களும் ஒரே நாளில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Rajinikanth : தலைவர் 171.. 7 சிறந்த பிரபலங்களை வைத்து பிளான் போடும் லோக்கி - தீயாய் பரவும் தகவல் - உண்மையா?

click me!