Indian 2: ஜூன்மாத ரிலீஸில் இருந்து பின்வாங்கும் இந்தியன் 2! கடைசி நேரத்தில் கமல் படத்துக்கு வந்த சிக்கல் என்ன?

First Published Apr 28, 2024, 9:38 AM IST

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படம் ஜூன் மாதம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதன் ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Indian 2

விக்ரம் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர் நடிகர் கமல்ஹாசன் மலைபோல் நம்பி இருக்கும் திரைப்படம் இந்தியன் 2. இப்படத்தை பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்குகிறார். லைகா நிறுவனம் தயாரிக்க கடந்த 2018-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படம், கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் படப்பிடிப்பு தளத்தில் கிரேன் சரிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் பலியான நிலையில், பாதியில் நிறுத்தப்பட்டது. இச்சம்பவத்தால் தயாரிப்பு நிறுவனத்துக்கும், இயக்குனர் ஷங்கருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது.

Indian 2 release date

பின்னர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, ஒரு கட்டத்தில் இப்படத்தை கைவிடும் சூழலும் வந்தது. அந்த சமயத்தில் தான் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் அப்படத்தை கையில் எடுத்தது. இதையடுத்து கடந்த 2022-ம் ஆண்டு இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ள நிலையில், கடந்த மாதம் இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி ஜூன் மாதம் இந்தியன் 2 திரைப்படம் திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இதையும் படியுங்கள்... Samantha : பான் இந்தியா ஸ்டாராக உயர்ந்த பல்லாவரம் பொண்ணு.. நடிகை சமந்தாவின் வியக்க வைக்கும் சொத்து மதிப்பு இதோ

Indian 2 release postponed

ஜூன் மாதத்திற்கு இன்னும் ஒரு மாதமே எஞ்சியுள்ள நிலையில், இந்தியன் 2 படத்தின் புரமோஷன் பணிகள் எதுவும் தொடங்கப்படாமல் உள்ளது. இதன்மூலம் இந்தியன் 2 திரைப்படம் ஜூன் மாதம் ரிலீஸ் ஆகாது என்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. இந்தியன் 2 படத்திற்காக ஒரு பாடல் காட்சி படமாக்க வேண்டி உள்ளதாம். கமல்ஹாசன் தற்போது தக் லைஃப் படப்பிடிப்பில் பிசியாக உள்ளதால், அவர் வந்த பின்னர் அப்பாடல் காட்சியை படமாக்கிய பின்னரே படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும், என்கிற ஐடியாவில் உள்ளாராம் ஷங்கர்.

Indian 2 release date changed

இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் ஜூன் மாதத்தில் இருந்து தள்ளிப்போவதால் தான் கமல்ஹாசன் நடித்துள்ள மற்றொரு படமான கல்கி ஜூன் மாதத்தில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அப்படம் வருகிற ஜூன் மாதம் 27-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. கல்கி படத்தை நாக் அஸ்வின் இயக்கி உள்ளார். இப்படத்தில் பிரபாஸ் நாயகனாக நடித்துள்ளார். இதில் நடிகர் கமல்ஹாசன் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். இதற்காக அவருக்கு ரூ.20 கோடி சம்பளமாக வழங்கப்பட்டு உள்ளதாம்.

இதையும் படியுங்கள்... ஒரு படத்துக்கு 2 கோடி சம்பளம்! 500 கோடிக்கு சொத்து சேர்த்துள்ள ஒரே தென்னிந்திய காமெடி நடிகர் யார் தெரியுமா?

click me!