கமல்ஹாசனின் கைவிடப்பட்ட படத்தின் தலைப்பை தூசு தட்டி தூக்கிய எச்.வினோத்! KH233 படத்தின் டைட்டில் இதுவா?

First Published Oct 23, 2023, 6:44 PM IST

இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ள புதிய படத்திற்காக, கமல் நடித்து ஏற்கனவே கைவிட பட்ட படத்தின் டைட்டிலை தட்டி தூக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக சமூக வலைத்தளத்தில் தீயாக ஒரு தகவல் பரவி வருகிறது.
 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான, 'விக்ரம்' படத்தின் தாறு மாறு வெற்றிக்கு பின்னர் நடிகர் கமல்ஹாசன் சினிமா கிராப் ஏறுமுகமாகவே உள்ளது. இவர் நடிப்பில் தற்போது இந்தியன் 2 திரைப்படம் தயாராகி வருகிறது. ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்க்ஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு துவக்கத்திலேயே இப்படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. 
 

இந்தியன் 2 படத்துக்கு பின்னர் தெலுங்கில், பான் இந்தியா படமாக உருவாகும், பிரபாஸின் கல்கி படத்திலும் கமல் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. கல்கி திரைப்படத்தை, 'மகாநடி' பட இயக்குனர் நாக் அஸ்வின் இயக்குகிறார். இப்படத்தின் ஷூட்டிங்கும் படு ஜோராக தற்போது நடந்துகொண்டிருக்கிறது.

Karthika Nair Engagement Photos: மகள் கார்த்திகாவின் நிச்சயதார்த்த புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ராதா!
 

இதுதவிர கமல்ஹாசனின் கைவசம் மேலும் இரண்டு படங்கள் உள்ளது. அதில் ஒன்று ஹெச்.வினோத் இயக்கும் படம். இப்படத்தை கமல்ஹாசனே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கிறார். இப்படத்திற்காக நடிகர் கமல்ஹாசன் பிரத்யேகமாக துப்பாக்கி சுடுதல் பயிற்சி எடுத்த வீடியோ கூட அண்மையில் வெளியாகி வைரலானது.
 

இந்நிலையில், கமல்ஹாசன் - ஹெச்.வினோத் கூட்டணியில் உருவாகும் படத்தின் டைட்டில் குறித்த தகவல் தற்போது தீயாய் பரவி வருகிறது. அதன்படி இப்படத்திற்கு 'தலைவன் இருக்கின்றான்' என டைட்டில் வைக்க திட்டமிட்டுள்ளாராம் ஹெச்.வினோத். ஏற்கனவே கமல்ஹாசன் கடந்த 2018 ஆம் ஆண்டு இந்த தலைப்பில் ஒரு படத்தை இயக்கி நடிக்க உள்ளதாக அறிவித்தார். இந்த படத்தில் கமல்ஹாசனுடன் சேர்ந்து, பிரபல பாலிவுட் நடிகர் சைப் அலிகான் நடிக்க இருந்த நிலையில், அப்படம் திடீர் என கைவிடப்பட்டது.

விஜய் டிவியில் TRP-க்காக நடக்கும் தில்லு முல்லு! ரஜினி மற்றும் விஜய் படங்களின் அட்ட காப்பியால இருக்கு?
 

ஆனால் தற்போது இயக்குனர் எச்.வினோத் தான் இயக்கும் படம்... அரசியல் சார்ந்த கதை என்பதால், இந்த தலைப்பு மிகவும் பொருத்தமாக இருக்கும் என கமல்ஹாசனின் பழைய தலைப்பையே தன்னுடைய படத்திற்கு வைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே பல தலைப்புகள் இப்படத்தின் டைட்டில் என உலா வரும் நிலையில், இதுவாவது உண்மையாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!