ரஜினிகாந்தை தொடர்ந்து நெல்சனுக்கு செக் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்த கலாநிதி மாறன்!

First Published Sep 1, 2023, 7:00 PM IST

ஜெயிலர் திரைப்படம் வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ள நிலையில், இந்த படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப் குமாருக்கு செக் ஒன்றை வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் கலாநிதி மாறன்.
 

ஜெயிலர் திரைப்படம் கடந்த மாதம் 10-ந் தேதி திரைக்கு வந்தது. நெல்சன் இயக்கிய இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் 'ஜெயிலர்' முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்திற்கு கூடுதல் வலு சேர்க்கும் விதமாக ரஜினியுடன் கன்னட சூப்பர்ஸ்டார் ஷிவ ராஜ்குமார், மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெரிப் ஆகியோரும் கேமியோ ரோலில் நடித்திருந்தனர். இவர்களுடன் மலையாள நடிகர் விநாயகனும் டெரர் வில்லனாக வந்து தன்னுடைய ஆக்ரோஷமான நடிப்பால் திரையரங்கை அதிரவைத்தார்.
 

மேலும் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடிகை ரம்யா கிருஷ்ணன் நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்த படத்தில் நடித்திருந்தார். ஜெயிலர் படம் ரிலீஸ் ஆனது முதல் தொடர்ந்து  பாசிடிவ் விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், உலகம் முழுவதும் அணைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதே போல், பாக்ஸ் ஆபீஸிலும்... இப்படத்தை தயாரித்த சன் பிச்சர்ஸ் நிறுவனத்திற்கு பல மடங்கு லாபத்தை ஈட்டி கொடுத்துள்ளது.

குடும்பத்துடன் திருக்கடையூரில் சுவாமி தரிசனம் செய்த இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்!

ஜெயிலர் பட வெற்றியில், முகுந்த உச்சாகத்தில் இருக்கும் சன் பிச்சர்ஸ் நிறுவனம்... நேற்றைய தினம் 'ஜெயிலர்' படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு, சம்பளம் இல்லாமல் அவரின் ஷேர் ரூபாய் 110 கோடியை கொடுத்ததாகவும், அதே போல் BMW கார் ஒன்றை பரிசாக வழங்கிய புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியாகி வைரலானது.
 

இதை தொடர்ந்து கலாநிதி மாறன், ஜெயிலர் படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப் குமாரை சந்தித்து அவருக்கு குறிப்பிட்ட தொகையை பரிசாக கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுள்ளார். மேலும் நேற்று ரஜினிக்கு கார் கொடுக்கும் போது இரண்டு புது கார்கள் அந்த வீடியோவில் பார்க்க முடிந்தது. எனவே இன்னொரு கார் கண்டிப்பாக, நெல்சன் திலீப் குமாருக்கு வழங்க பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால் கார் வழங்கியதற்கான எந்த புகைப்படங்களும், வீடியோவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

என் அம்மா சொன்ன வார்த்தை! காலில் விழுந்த ரஜினி! திரைப்பட கல்லூரியில் சூப்பர் ஸ்டார் இப்படிப்பட்டவரா?

click me!