Jayam Ravi Father : நான் இஸ்லாமியர், மனைவி பிராமின்! 3 முறை திருமணம் செய்தது பற்றி... ஜெயம் ரவி தந்தை ஓபன்டாக்

First Published Apr 1, 2024, 1:13 PM IST

ஜெயம் ரவியின் தந்தையும் புகழ்பெற்ற எடிட்டருமான மோகன் தனது மனைவி வரலட்சுமியுடனான காதல் திருமணம் குறித்து பேட்டி ஒன்றில் மனம்விட்டு பேசியுள்ளார்.

தமிழ் திரையுலகில் பிசியான நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றிக்கு பின்னர் ஜெயம் ரவியின் மார்க்கெட் ஜெட் வேகத்தில் உயர்ந்துவிட்டது. இதனால் அவருக்கு பட வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் உள்ளன. தற்போது அவர் கைவசம் ராஜேஷ் இயக்கும் பிரதர், அர்ஜுனன் இயக்கத்தில் ஜீனி, கிருத்திகா உதயநிதி இயக்கும் காதலிக்க நேரமில்லை, மோகன் ராஜா இயக்கத்தில் தனி ஒருவன் இரண்டாம் பாகம் உள்பட அரை டஜன் படங்கள் உள்ளன.

நடிகர் ஜெயம் ரவியின் தந்தை மோகன், தென்னிந்திய திரையுலகில் முன்னணி எடிட்டராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வந்தவர் ஆவார். இவருக்கு இரண்டு மகன்கள் அதில் மூத்த மகன் ராஜா இயக்குனராக கலக்கி வருகிறார். அவர் ஜெயம், உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்ரமணியம், வேலாயுதம், தில்லாலங்கடி, தனி ஒருவன், எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி போன்ற படங்களி இயக்கி உள்ளார். அதேபோல் எடிட்டர் மோகனின் இரண்டாவது மகனான ஜெயம் ரவி ஹீரோவாக நடித்து வருகிறார். 

இதையும் படியுங்கள்... Saranya Ponvannan : கார் பார்க்கிங்கால் ஏற்பட்ட தகராறு... நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது கொலை மிரட்டல் புகார்

ஜெயம் ரவியின் தந்தை மோகன் தனது மனைவி வரலட்சுமியுடன் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டபோது, தங்களது காதல் திருமணம் குறித்து மனம் விட்டு பேசி இருக்கிறார். அதில் அவர் கூறியதாவது :”நான் முஸ்லீம் மதத்தை சேர்ந்தவன். எனது மனைவி ஒரு பிராமண வீட்டு பெண். எனது உண்மையான பெயர் ஜின்னா. நடிகர் தங்கவேல் வீட்டில் தான் நான் சிறுவயதில் இருந்து வளர்ந்தேன். தங்கவேலுவுக்கு குழந்தைகள் இல்லாததால் அவர் என்னை குழந்தையாக தத்தெடுத்து வளர்த்து வந்தார். 

அவர் தான் எனக்கு மோகன் என பெயர் சூட்டினார். தங்கவேல் மூலம் தான் நான் சினிமாவில் எடிட்டிங் பணிகளை கற்றுக்கொண்டேன். எனக்கும் என் மனைவி வரலட்சுமிக்கு மூன்று முறை திருமணம் நடைபெற்றது. நாங்கள் இருவரும் மதம் விட்டு மதம் மாறி திருமணம் செய்துகொண்டதாக சொல்கிறார்கள். ஆனால் உண்மையில் நாங்கள் இருவரும் மனம்விட்டு தான் கல்யாணம் செய்துகொண்டோம். சந்தோஷமாக வாழ்கிறோம்” என இன்றளவும் குறையாத காதலுடன் எடிட்டர் மோகனும் அவரது மனைவி வரலட்சுமியும் கூறி இருக்கின்றனர்.

இதையும் படியுங்கள்... Thug Life : துல்கருக்கு பதில் சிம்பு... ஜெயம் ரவிக்கு பதில் இவரா? தக் லைஃப் பட வாய்ப்பை தட்டிதூக்கிய மாஸ் ஹீரோ

click me!