ரொமான்ஸில் விக்கி - நயனை மிஞ்சிய ‘ப்ரியா - அட்லீ’ ஜோடி... காத்துவாக்குல காதல் செய்யும் கலக்கல் கிளிக்ஸ் இதோ

First Published Mar 12, 2024, 2:48 PM IST

ஜவான் படத்தின் இயக்குனர் அட்லீ, தன்னுடைய காதல் மனைவி பிரியா உடன் எடுத்துக் கொண்ட ரொமாண்டிக் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகிறது.

Priya Atlee

இயக்குனர் அட்லீயும், நடிகை பிரியாவும் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களது திருமணத்தில் நடிகர் விஜய் உள்பட ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

Priya Atlee photos

பிரியாவை காதல் திருமணம் செய்துகொண்ட பின்னர் அட்லீ சினிமாவில் விஜய்யை வைத்து மெர்சல், பிகில் என இரண்டு மாஸ் ஹிட் படங்களை இயக்கினார்.

Priya Atlee latest clicks

அட்லீ மனைவி பிரியாவும் சினிமாவில் நடித்திருக்கிறார். சிங்கம், நடுநிசி நாய்கள் போன்ற படங்களில் நடித்துள்ள பிரியா திருமணத்திற்கு பின் நடிக்கவில்லை.

Priya Atlee gorgeous photos

அட்லீ - பிரியா ஜோடிக்கு திருமணமாகி சுமார் 9 ஆண்டுகளுக்கு பின்னர் தான் குழந்தை பிறந்தது. கடந்த ஆண்டு பிறந்த அந்த ஆண் குழந்தைக்கு மீர் என பெயரிட்டு உள்ளனர்.

இதையும் படியுங்கள்... கோலிவுட்டை தொடர்ந்து பாலிவுட் SK உடன் கூட்டணி அமைத்த ஏ.ஆர்.முருகதாஸ் - ரிலீஸ் தேதியுடன் வந்த அசத்தல் அறிவிப்பு

Priya Atlee beautiful pics

மகன் பிறந்த அந்த ஆண்டு தான் பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமானார் அட்லீ. அதுவும் முதல் படமே பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானை வைத்து இயக்கினார்.

Atlee wife Priya

அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி பிரம்மாண்ட வெற்றியை ருசித்ததோடு பாக்ஸ் ஆபிஸில் ரூ.1100 கோடிக்கு மேல் வசூலித்தது.

Priya Atlee happy clicks

கடந்த ஆண்டு வசூலை வாரிக்குவித்த ஜவான் திரைப்படம் இந்த ஆண்டு விருதுகளை வென்று குவிக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற ஜீ சினி விருதுகள் நிகழ்ச்சியில் அட்லீ சிறந்த இயக்குனருக்கான விருதை வென்று அசத்தினார். 

Atlee romance with Priya

அந்த விருது விழாவிற்காக அணிந்து வந்த பிளாக் அண்ட் ஒயிட் ஆடையில் பிரியாவும் அட்லீயும் ஜோடியாக செம்ம ரொமான்ஸ் செய்தபடி போட்டோஷூட்டும் நடத்தி உள்ளனர். அதைப்பார்த்த நெட்டிசன்கள் இருவரும் ரொமான்ஸில் விக்கி - நயனையே மிஞ்சிவிட்டதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... பா ரஞ்சித் மற்றும் மாரி செல்வராஜுடன் இணையும் துருவ் விக்ரம்..! ஹீரோயின் யார் தெரியுமா? வெளியான தூள் அப்டேட்!

click me!