பிரதர்னு சொன்ன ப்ரியா... விடாமல் பாலோ பண்ணிய அட்லீ - ஜவான் இயக்குனரின் காதல் சக்சஸ் ஆனது எப்படி?

First Published Sep 17, 2023, 12:10 PM IST

கோலிவுட்டில் இருந்து பாலிவுட் வரை சென்று கலக்கிக்கொண்டிருக்கும் இயக்குனர் அட்லீயின் காதல் கதையை பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

atlee, priya

விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்கிற தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ப்ரியா. இவர் இயக்குனர் அட்லீயை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரும் பொதுவான நண்பர்கள் மூலம் தான் ஒருவருக்கொருவர் அறிமுகமாகி இருக்கிறார்கள். இதையடுத்து தன்னுடைய முகப்புத்தகம் என்கிற குறும்படத்தில் ப்ரியாவை நடிக்க வைத்தபோது தான் அட்லீக்கும், அவருக்கும் இடையேயான நட்பு ஏற்பட்டுள்ளது. அந்த சமயத்தில் அட்லீயை பிரதர்னு தான் அழைப்பாராம் ப்ரியா.

Priya atlee

பின்னர் சினிமாவில் நுழைந்த அட்லீ, இயக்குனர் ஷங்கரிடம் எந்திரன் மற்றும் நண்பன் ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார். பின்னர் ராஜா ராணி படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அட்லீ, முதல் படத்திலேயே கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தார். ராஜா ராணி படத்தில் கூட நஸ்ரியா, ஆர்யாவை ஆரம்பத்தில் பிரதர் என அழைப்பார். பின்னர் இருவரும் காதலித்து கரம்பிடிக்கும்படி காட்சிப்படுத்தி இருப்பார் அட்லீ.

இதையும் படியுங்கள்... பழங்குடியின மக்களுக்காக புது ஆம்புலன்ஸ்... பாரி வள்ளல் போல் வாரி வழங்கிய பாலாவுக்கு குவியும் பாராட்டுக்கள்

atlee, Priya love story

சினிமாவில் அவர் காட்சியாக வைத்தது ரியல் லைஃபிலும் நடந்திருக்கிறது. ராஜா ராணி வெற்றிக்கு பின்னர் ஒருநாள் ப்ரியாவை நேரில் சந்தித்து பேசி இருக்கிறார் அட்லீ. அப்போது தனக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து வருவதாக கூறி இருக்கிறார் ப்ரியா, உடனே என்னுடைய ஜாதகத்தையும் தரவா என அட்லீ சொல்ல, அப்போதுதான் அவருக்கு தன்மேல் கிரஷ் இருப்பதை பிரியா உணர்ந்திருக்கிறார். பின்னர் இருவருக்கும் இடையேயான நட்பு படிப்படியாக காதலாக மாறி இருக்கிறது.

Atlee son meer

இதையடுத்து இருவரும் குடும்பத்தினர் சம்மதத்துடன் கடந்த 2014-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். ப்ரியாவை திருமணம் செய்த பின்னர் அட்லீக்கு அடுத்தடுத்து விஜய்யுடன் 3 படங்களில் பணியாற்றும் ஜாக்பாட் வாய்ப்பு கிடைத்தது. இதையடுத்து அண்மையில் பாலிவுட்டில் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி வெற்றிகண்டுள்ள அட்லீ, ப்ரியாவை ஒரு லக்கி சார்ம் ஆகவே பார்த்து வருகிறார். இந்த ஜோடிக்கு கடந்த ஜனவரி மாதம் மீர் என்கிற ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்...  ஆண்டவர் கிட்டயே அப்டேட்டா... கமலின் வெறித்தனமான ரசிகன் என்பதை மீண்டும் நிரூபித்த லோகேஷ் கனகராஜ்

click me!