57 வயதிலும் வேகம் குறையாத இசைப்புயல்... பணக்கார இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர்.ரகுமானின் சொத்து மதிப்பு இதோ

First Published Jan 6, 2024, 10:19 AM IST

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இன்று தனது 57வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரின் சொத்து மதிப்பு பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

AR Rahman

கோலிவுட்டில் தனிக்காட்டு ராஜாவாக இளையராஜா வலம் வந்துகொண்டிருந்த சமயத்தில் அவருக்கு எதிராக இயக்குனர் பாலசந்தரால் களமிறக்கிவிடப்பட்ட குதிரை தான் ஏ.ஆர்.ரகுமான். பாலச்சந்தர் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கிய மாஸ்டர் பீஸ் படமான ரோஜா மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார் ஏ.ஆர்.ரகுமான். முதல் படத்திலேயே தன்னுடைய இசையால் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார் ஏ.ஆர்.ரகுமான்.

Isaipuyal AR Rahman

ரோஜாவுக்கு பின் தமிழில் இவர் தொட்டதெல்லாம் ஹிட்டாக அமைந்ததால், படிப்படியாக பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டில் இருந்தும் இசைப்புயலுக்கு பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. அந்த வகையில் கடந்த 2008-ம் ஆண்டு வெளிவந்த ஸ்லம்டாக் மில்லியனர் என்கிற வெளிநாட்டு படத்துக்காக ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த ஜெய் ஹோ பாடலுக்கு உலகின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது தட்டிச்சென்றது. அதுமட்டுமின்றி அப்படத்தின் பின்னணி இசைக்காகவும் ஆஸ்கர் வென்று, ஒரே நேரத்தில் 2 ஆஸ்கார் விருதுகளை வென்று சரித்திரத்தில் இடம்பிடித்தார் ஏ.ஆர். ரகுமான்.

AR Rahman Birthday

தன்னுடைய இசையால் பல உச்சங்களை தொட்டபோதிலும், எல்லா புகழும் இறைவனுக்கே என சொல்லி எளிமையின் சிகரமாக திகழ்ந்து வருகிறார் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான். இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, மலையாளம் என பல்வேறு மொழி படங்களுக்கு இசையமைத்து பான் இந்தியா இசையமைப்பாளராக வலம் வருகிறார். ஏ.ஆர்.ரகுமான், இசையமைப்பாளராக அறிமுகமாகி 30 ஆண்டுகளைக் கடந்துவிட்டாலும் இன்றைய இளைய தலைமுறையினரையும் கவரும் விதமாக பாடல்களை கொடுத்து இன்றளவும் டாப் இசையமைப்பாளராக வலம் வருகிறார்.

இதையும் படியுங்கள்... நாக்கு முக்க பாடலுக்கு நான் ஸ்டாப் நடனம்.. அமெரிக்க ரியாலிட்டி ஷோவில் அலப்பறை கிளப்பிய இந்தியர்கள்- வீடியோ இதோ

AR Rahman salary

ஒரு படத்துக்கு இசையமைக்க ரூ.8 கோடி வரை சம்பளமாக வாங்கி வரும் ஏ.ஆர்.ரகுமான், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இசைக்கச்சேரி நடத்தி அதன் மூலமும் நன்கு கல்லாகட்டி வருகிறார். இதுதவிர தன்னுடைய ஈர்க்கும் குரலால் பாடகராகவும் முத்திரையை பதித்து பல்வேறு சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடி இருக்கிறார். இசைப்புயலின் ஆண்டு வருமானம் மட்டும் ரூ.50 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி சராசரியாக ஒரு மாதத்திற்கு ரூ.4 கோடி வரை அவர் சம்பாதித்து வருவதாக கூறப்படுகிறது.

AR Rahman Net Worth

ஏ.ஆர்.ரகுமானுக்கு சொந்தமாக மும்பை, சென்னை உள்ளிட்ட நகரங்களில் சொகுசு வீடுகள் உள்ளன. இதுதவிர சென்னையில் பிலிம் ஸ்டூடியோ ஒன்றையும் வைத்திருக்கிறார். அதில் சினிமா படப்பிடிப்புகள் நடத்த வாடகைக்கு விட்டு அதன் மூலம் பெரும் தொகை சம்பாதித்து வருகிறார். சென்னையில் தன் வீட்டிலேயே இசைக்கூடம் ஒன்றை வைத்திருக்கும் ரகுமான், துபாயில் பல கோடி ரூபாய் மதிப்பில் பிரம்மாண்ட இசைக்கூடம் ஒன்றை அண்மையில் தொடங்கினார். சர்வதேச தரத்தில் கட்டப்பட்டுள்ள அந்த இசைக்கூடத்தில் தான் தனது சமீபத்திய படங்களின் இசையமைப்பு பணிகளை ரகுமான் மேற்கொண்டு வருகிறார்.

AR Rahman car collection

இப்படி இசை உலகில் 30 ஆண்டுகளுக்கு மேல் கோலோச்சி வரும் ஏ.ஆர்.ரகுமான் இன்று தனது 57-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு வாழ்த்து மழை பொழிந்த வண்ணம் உள்ள நிலையில், அவரின் சொத்து மதிப்பு பற்றி தற்போது பார்க்கலாம். அதன்படி ஏ.ஆர்.ரகுமானின் சொத்து மதிப்பு மட்டும் ரூ.600 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது. இது கோலிவுட்டின் டாப் ஹீரோக்களான விஜய், ரஜினியைவிட அதிகமாகும். ஏ.ஆர்.ரகுமானிடம் மெர்சிடிஸ் பென்ஸ், ஜாகுவார், வால்வோ போன்ற சொகுசு கார்களும் உள்ளன. இந்திய சினிமாவிலேயே அதிக சொத்து மதிப்பு கொண்ட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... ஹீரோயின் உடன் டிடிஎப் வாசன் காதல்.... மஞ்சள் வீரனின் மஞ்ச காட்டு மைனா இவர்தானா? - வைரலாகும் போட்டோஸ்

click me!