அடுத்த 6 மாதத்தில் 7 பிரம்மாண்ட படங்கள் ரிலீஸ்... பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை அடிச்சு துவம்சம் பண்ண ரெடியான கோலிவுட்

First Published Apr 12, 2024, 11:03 AM IST

தொடர் தோல்விகளால் துவண்டு கிடக்கும் கோலிவுட்டிற்கு புத்துயிர் கொடுக்கும் விதமாக வரிசையாக ஏழு பிரம்மாண்ட படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன.

இந்தியன் 2 (Indian 2)

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் தான் இந்தியன் 2. இப்படத்தில் பிரியா பவானி சங்கர், சித்தார்த், சமுத்திரக்கனி, காஜல் அகர்வால் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இப்படம் வருகிற ஜூன் மாதம் 13-ந் தேதி உலகமெங்கும் திரைகாண உள்ளது.

தங்கலான் (Thangalaan)

பா.இரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் தங்கலான். வரலாற்று கதையம்சம் கொண்ட இப்படத்தில் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம் வருகிற ஜூன் 28-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.

ராயன் (Raayan)

தனுஷின் 50-வது திரைப்படம் தான் ராயன். இப்படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்துள்ளது மட்டுமின்றி இயக்கியும் உள்ளார். இதில் தனுஷ் உடன் சந்தீப் கிஷான், வரலட்சுமி சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா, காளிதாஸ் ஜெயராம், பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தை வருகிற ஜூலை மாதம் 26-ந் தேதி திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு உள்ளனர்.

அமரன் (Amaran)

கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் தான் அமரன். இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி உள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 9-ந் தேதி திரைக்கு வர வாய்ப்புள்ளது.

இதையும் படியுங்கள்... Darshan Anju Kurian : மலையாள நடிகையை ரகசியமாக திருமணம் செய்துகொண்டாரா கனா பட ஹீரோ தர்ஷன்? லீக்கான போட்டோஸ்

கோட் (GOAT movie)

வெங்கட் பிரபு - விஜய் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் கோட். இப்படத்தில் விஜய்யுடன் மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, பிரேம்ஜி, பிரசாந்த், பிரபுதேவா, மோகன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது. இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5-ந் தேதி விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆக உள்ளது.

வேட்டையன் (Vettaiyan)

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வேட்டையன். ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இப்படத்தை இயக்கி வருகிறார். இதில் பகத் பாசில், ராணா டகுபதி, அமிதாப் பச்சன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படம் வருகிற அக்டோபர் மாதம் 10-ந் தேதி ஆயுத பூஜை விடுமுறையில் திரைக்கு வர உள்ளது.

விடாமுயற்சி (Vidaamuyarchi)

மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் பக்கா ஆக்‌ஷன் திரைப்படம் தான் விடாமுயற்சி. அஜித் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். மேலும் ஆரவ், அர்ஜுன் வில்லனாக நடிக்கும் இப்படம் வருகிற அக்டோபர் மாதம் தீபாவளி விருந்தாக திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... Rajamouli Dance : திடீரென பிரபுதேவா-வாக மாறி டாப் கிளாஸாக டான்ஸ் ஆடிய இயக்குனர் ராஜமவுலி - வைரல் வீடியோ இதோ

click me!