Kajal Aggarwal: கால் முளைத்த பூவே! கருப்பு நிற ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் காஜல் அகர்வால் நடத்திய ஹாட் போட்டோ ஷூட்

First Published Oct 13, 2023, 5:06 PM IST

திருமணம் ஆகி, குழந்தை பிறந்த பின்பும்... அழகு தேவதையாக திரையுலகை அலங்கரித்து கொண்டிருக்கும் நடிகை காஜல் அகர்வாலின் ரீசென்ட் ட்ரான்ஸ்பரென்ட் சாரீ போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

Kajal Aggarwal Marriage:

தென்னிந்திய திரையுலகில் முன்னணி ஹீரோயினாக இருந்த போதே, கடந்த 2020-ம் ஆண்டு, தன்னுடைய நீண்ட நாள் காதலரான கவுதம் கிச்சலு என்பவரை திருமணம் செய்து கொண்டார் காஜல் அகர்வால். திருமணத்திற்கு பின்னரும், தன்னுடைய கணவர் மற்றும் குடும்பத்தினர் சம்மதத்துடன், தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தி கவருகிறார்.
 

Kajal Aggarwal Baby Birth:

திருமணமான ஒரு வருடத்தில் கர்ப்பமான காஜலுக்கு கடந்த ஆண்டு அழகிய ஆண் குழந்தை ஒன்றும் பிறந்தது. குழந்தை பிறந்த பின்னர், 6 மாதம் வரை நடிக்காமல் இருந்த காஜல் மீண்டும் நடிக்க துவங்கினார். குறிப்பாக பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், கமல்ஹாசனுக்கு ஜோடியாக இவர் நடிக்கும் வந்த இந்தியன் 2 படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக, தன்னுடைய உடல் எடையை பல்வேறு உடற்பயிற்சிகள் செய்து குறைத்து மட்டும் இன்றி, இந்த படத்திற்காகவும், களரி, குதிரை ஏற்றம் போன்ற பயிற்சிகளிலும் ஈடுபட்டார்.

டீப் நெக் கவர்ச்சியில் லோ ஆங்கில் போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்! பார்த்தாலே போதை ஏற்றும் ஸ்டன்னிங் போட்டோஸ்!
 

Indian 2 movie heroine:

ஒருவழியாக இந்த படத்தில் நடித்து முடித்துவிட்ட காஜல், அடுத்ததாக உமா என்கிற ஹிந்தி படத்திலும், தெலுங்கில் சத்யபாமா என்கிற படத்திலும் நடித்து வருகிறார். அதே போல் சமீப காலமாக ஹீரோயின்களுக்கு முக்க்கியத்துவம் கொண்ட கதைகளையே அதிகம் தேர்வு செய்து நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Kajal Started Business:

நடிப்பை தாண்டி, நயன்தாரா பாணியில் பிசினஸிலும் ஆர்வம் காட்டி வரும் காஜல், அண்மையில் 'காஜல் பை காஜல்’ என்கிற அழகு சாதன பொருள் விற்பனையை தொடங்கினார். கண் மை விற்பனையகமான இதன் தொடக்க விழாவுக்கு தன் காதல் கணவர் கவுதம் கிச்சலுவை தான் சிறப்பு விருந்தினராக அழைத்து இருந்தார் காஜல் அகர்வால்.

அப்போ இல்ல.. இல்லனு சொன்னதெல்லாம் உருட்டா? ரவீனாவை காதலிக்கும் மேட்டரை பிக்பாஸ் வீட்டில் ஓப்பன் செய்த மணி!

Kajal Latest Photos:

ஒரு பக்கம் நடிப்பு, மறுபக்கம் பிஸ்னஸ் என படு பிசியாக இருக்கும் காஜல்... அவ்வப்போது தன்னுடைய அழகிய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு, ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அந்த வகையில், கருப்பு நிற ட்ரான்ஸ்பரென்ட் சேலையில்... கால் முளைத்து பூ போல், போஸ் கொடுத்துள்ள ஹாட் போட்டோஸ் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!