இனி Ro Water மெஷின் தேவையில்லை.. நொடியில் வீட்டில் நாமே சுலபமாக Purifier Water தயாரிக்கலாம்! எப்படி..?

First Published Apr 19, 2024, 8:13 PM IST

அதிகரித்து வரும் மாசுபாடு காரணமாக பலர் Ro Water மெஷின் வாங்குகின்றனர். ஆனால் அதை வாங்காமலே சில பொருட்களை வைத்து வீட்டிலேயே தண்ணீரை எளிதாக சுத்திகரிக்கலாம்.

நாம் ஆரோக்கியமாக இருக்க ஆரோக்கியமான உணவு, உடற்பயிற்சி போன்றவற்றில் சிறப்பு கவனம் செலுத்துவது உண்டு. ஆனால், இவற்றுடன் நாம் குடிக்கும் தண்ணீரும் அவசியம் என்பது பலருக்கு தெரிவதில்லை. ஆனால், ஒருசிலரே இதில் கவனம் செலுத்துகிறார்கள்.

இந்நிலையில், தற்போது அதிகரித்து வரும் மாசுபாடு காரணமாக பலர் வாட்டர் பில்டர் வாங்குகின்றனர். காரணம் அவர்கள் குடிக்கும் தண்ணீரில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். தரமான வாட்டர் பில்டர் குறைந்தது 3 ஆயிரம் செலவாகும். ஆனால் இப்படி இதை வாங்காமலே வீட்டிலேயே தண்ணீரை எளிதாக சுத்திகரிக்க முடியும் தெரியுமா..?

ஆம்.. வாட்டர் பில்டர் வாங்காமலேயே வீட்டில் இருக்கும் சில பொருட்களைப் பயன்படுத்தி தண்ணீரை எளிதாக சுத்திகரிக்க முடியும். இதன் மூலம் தண்ணீரை சுத்திகரித்து குடிக்கலாம். சரி வாங்க இப்போது நாம் அது குறித்து பார்க்கலாம்..

உங்களுக்கு ஐஸ் வாட்டர் குடிக்கும் பழக்கம் இருந்தால், உடனே அதை நிறுத்துங்கள். இது ஆரோக்கியத்திற்கு அவ்வளளவு நல்லதல்ல. அதற்கு பதிலாக, கொதிக்க வைத்த நீரை குடியுங்கள். வெந்நீர் தண்ணீரில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கிறது.

அதுபோல், தண்ணீரைச் சுத்தப்படுத்த  உப்பைப் பயன்படுத்தலாம். இதற்கு தண்ணீரில் சிறிது உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். நினைவில் வைத்து கொள்ளுங்கள்.. அதிக உப்பு சேர்க்க வேண்டாம். இதன் விளைவாக நீரில் உள்ள பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு தண்ணீர் சுத்திகரிக்கப்படுகிறது..

இதையும் படிங்க:  வீட்டில் ஆர்ஓ வாட்டரை பயன்படுத்துபவரா நீங்கள்...?? தயவு செய்து இதை படியுங்கள்...!!

தண்ணீரில் உள்ள பாக்டீரியாவை அழிக்க, எலுமிச்சை சிறந்தது. இதற்கு தண்ணீரில் சில துளிகள் எலுமிச்சை சாறு சேர்க்கவும். எலுமிச்சை சாறு தண்ணீரில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, தண்ணீரை சுத்தப்படுத்துகிறது.

இதையும் படிங்க:  RO வேஸ்ட் வாட்டரில் குளிக்கலாமா? தெரிஞ்சிக்க படிங்க ஆனா 'ஷாக்' ஆகாம படிங்க..!!

குளோரின் தண்ணீரை சுத்திகரிக்கவும் பயன்படுத்தலாம். இவை கடைகளில் எளிதாகக் கிடைக்கின்றன. குளோரின் மாத்திரைகளை தண்ணீரில் போட்ட பிறகு சுமார் 30 நிமிடங்களுக்கு தண்ணீரை குடிக்க கூடாது. அதன் பிறகு தான் தண்ணீரை குடிக்க வேண்டும்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!