High BP : மருந்துகள் இல்லாமலே உயர் ரத்த அளவை குறைக்கலாம்.. இந்த எளிய வழிகளை ஃபாலோ பண்ணுங்க..

First Published Apr 16, 2024, 8:50 AM IST

மருந்துகள் இல்லாமல் உங்கள் ரத்த அழுத்தத்தை நிர்வகிக்க உதவும் சில எளிய வழிகள் குறித்து பார்க்கலாம்.

உயர் ரத்த அழுத்தத்தால் உலகளவில் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இது பெரும்பாலும் 'சைலண்ட் கில்லர்’ என்று அழைக்கப்படுகிறது.ஏனெனில் இது வெளிப்படையான அறிகுறிகளை காட்டாது என்பதால் பலருக்கு உயர் அழுத்த பிரச்சனை இருக்கிறது என்பதே தெரியாது. இருப்பினும், உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவில்லை எனில் அது இதய நோய், பக்கவாதம் மற்றும் சிறுநீரக பாதிப்பு போன்ற கடுமையான உடல்நலச் சிக்கல்களுக்கு வழிவகுக்கும்.

உயர் ரத்த அழுத்தம் காரணமாக கிட்டத்தட்ட 1.3 பில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக இதய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் கிட்டத்தட்ட 10 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. 

எனவே இந்த உயர ரத்த அழுத்தம் உங்கள் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்காமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுப்பது முக்கியம். உங்களுக்கு உயர் ரத்த அழுத்தம் இருந்தால், நிலைமையை நிர்வகிக்க உதவும் மருந்துகளை உங்கள் மருத்துவர் பரிந்துரைப்பார். மேலும், உங்கள் ரத்த அழுத்த நிலையை நிர்வகிக்க உதவும் சில உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களையும் நீங்கள் செய்ய வேண்டும்.

இருப்பினும், உங்களுக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்படும் அபாயம் அல்லது இரத்த அழுத்தத்தில் லேசான அதிகரிப்பு மட்டுமே இருந்தால், வாழ்க்கை முறை மாற்றங்கள் உங்கள் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும். இது மருந்தின் தேவையை தாமதப்படுத்தலாம் அல்லது குறைக்கலாம். எனவே மருந்துகள் இல்லாமல் உங்கள் ரத்த அழுத்தத்தை நிர்வகிக்க உதவும் சில எளிய வழிகள் குறித்து பார்க்கலாம்.

எடை குறைப்பு

நீங்கள் வயது, உயரம் ஆகியவற்றுக்கு ஏற்ற உயரம் இல்லை எனில் அது ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும். எடை இழப்பு என்பது உங்கள் இரத்த அழுத்த அளவைக் கட்டுப்படுத்துவதற்கான சிறந்த வழிகளில் ஒன்றாகும். நீங்கள் அதிக எடை அல்லது பருமனாக இருந்தால், சிறிது எடையை குறைப்பது கூட உங்கள் ரத்த அழுத்த அளவுகளுக்கு பயனளிக்கும். குறிப்பாக . இடுப்பைச் சுற்றி அதிக எடையை இருப்பது உயர் இரத்த அழுத்த அபாயத்தை அதிகரிக்கும்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சி உங்கள் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும். எனவே நீங்கள் தவறாமல் உடற்பயிற்சி செய்வது மிகவும் முக்கியம். உங்கள் ரத்த அழுத்தம் அதிகரிப்பதைத் தடுக்க நீங்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது முக்கியம். தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது உயர் ரத்த அழுத்த அளவை பராமரிக்க உதவுகிறது.

protein

ஆரோக்கியமான உணவு

முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள் மற்றும் குறைந்த நிறைவுற்ற கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் நிறைந்த உணவைப் பின்பற்றவும். மேலும், உங்கள் உணவில் உள்ள பொட்டாசியம் உங்கள் இரத்த அழுத்தத்தில் உப்பின் விளைவுகளை குறைக்கும்.

salt

உப்பைக் குறைக்கவும்

உங்கள் உப்பு (சோடியம்) உட்கொள்ளலைக் குறைப்பது முக்கியம். உப்பின் அளவை குறைப்பது உயர் ரத்த அழுத்தத்தை 5 முதல் 6 மிமீ Hg வரை குறைக்க உதவும்.

மது மற்றும் புகைப்பிடித்தல்

உயர் ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் மது அருந்துவதைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது. இது உங்கள் இரத்த அழுத்தத்தை 4 mm Hg குறைக்க உதவும். அதே போல் புகைப்பிடித்தல் இரத்த அழுத்தத்தை கணிசமாக அதிகரிக்கிறது, எனவே புகைபிடிப்பதை நிறுத்துவது முக்கியம். இது உங்கள் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுவதோடு, இதய நோய் அபாயத்தையும் குறைக்கும்.

sleep

தூக்கம்

ஒருவரின் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வின் முக்கிய அம்சம் தூக்கம். தினமும் நீங்கள் 6 மணி நேரத்திற்கும் குறைவாக நீங்கள் நீண்ட நேரம் தூங்கினால், அது உயர் ரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும். இது தூக்கத்தில் மூச்சுத்திணறல் மற்றும் அமைதியற்ற கால் நோய்க்குறி போன்ற பல உடல்நலப் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.

மன அழுத்தம்

நாள்பட்ட மன அழுத்தம் உயர் ரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும். உங்கள் இரத்த அழுத்தத்தை குறைக்க உங்கள் மன அழுத்தத்தை கட்டுப்படுத்துவது முக்கியம். உங்கள் மன அழுத்தத்தை குறைக்க உதவும் நுட்பங்களை முயற்சிக்கவும், பின்பற்றவும், அதன் மூலம் உங்கள் ரத்த அழுத்தத்திற்கு பயனளிக்கும்.

ரத்த அழுத்தத்தை கண்காணிக்கவும்

வீட்டிலேயே உங்கள் ரத்த அழுத்த அளவை தவறாமல் சரிபார்க்கவும். அதனுடன், வழக்கமான இடைவெளியில் உங்கள் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்ய வேண்டும். ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்வாழ்விற்கும் முக்கியமானவர்கள் என்பதால் ஆதரவான நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரைக் கொண்டிருங்கள். மேலும், உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்வதை உறுதிசெய்து, தேவைப்படும்போது உதவி கேட்கவும்.

click me!