தவறுதலாக காலாவதியான உணவை சாப்பிட்டால் முதல்ல 'இத' செய்யுங்கள்..!

First Published Apr 29, 2024, 1:05 PM IST

காலாவதி தேதியான உணவை சாப்பிடலாமா..?அப்படி சாப்பிட்டால் என்ன நடக்கும்? இது பற்றி நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்று தெரிஞ்சுக்கலாம் வாங்க..
 

பொதுவாகவே, நாம் கடையில் இருந்து வாங்கி சாப்பிடும் ஒவ்வொரு உணவுக்கும் காலாவதி தேதி கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால், சிலர் அதை பார்க்காமல் சாப்பிட்டு விடுவார்கள். காலாவதி தேதியான உணவை சாப்பிடலாமா..?அப்படி சாப்பிட்டால் என்ன நடக்கும்?
இது பற்றி நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்று தெரிஞ்சுக்கலாம் வாங்க..

காலாவதியான உணவில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் உருவாகும். மேலும் அதில் இருக்கும் ரசாயனங்களால் அந்த உணவு ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. மீறி சாப்பிட்டால், பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படும்.

இதையும் படிங்க: Expired make-up: உங்களின் காலாவதியான விலை உயர்ந்த மேக்கப் பொருட்களை..மீண்டும் பயன்படுத்த 6 சிறந்த வழிகள் இதோ

காலாவதியான உணவை சாப்பிடால் ஏற்படும் தீமைகள்:

காலாவதியான உணவில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் உருவாகி விடும். அந்த உணவு விஷத்திற்கு சமம். மீறி சாப்பிடால், குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, காய்ச்சல் மற்றும் சில நேரங்களில் உறுப்பு சேதம் கூட ஏற்படும் அபாயம் உள்ளது.

காலாவதியான உணவு விஷத்திற்கு சமம் என்பதால், அதை சாப்பிட்டால்  ஒவ்வாமை, சுவாசக் கோளாறுகள், நரம்பியல் பிரச்சனைகள் போன்றவையும் வர வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

காலாவதியான உணவின் சுவை, நிறம் மற்றும் அமைப்பு ஆகியவற்றில் மாற்றம் ஏற்படும். நீங்கள் கடையில் வாங்கி சாப்பிடும் உணவில் துர்நாற்றம் வீசினால், அது கெட்டுப்போய்விட்டது என்று அர்த்தம். இப்படி கெட்டுப்போன உணவை சாப்பிடால்,  செரிமான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

சில உணவுகள் கெட்டு போகாமல் இருக்க அவற்றில், பிஸ்பெனால் அல்லது பித்தலேட்டுகள் போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் அதிகம் வைக்கப்படுகின்றன. அந்த உணவை நீண்ட நாட்கள் வைத்து சாப்பிட்டால், அந்த ரசாயனங்கள் உணவில் கலந்து, அந்த ரசாயனங்கள் நம் உடலில் நுழைந்து உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

இதையும் படிங்க: சாக்லேட் சாப்பிட்ட ஒன்றரை வயது குழந்தைக்கு ரத்த வாந்தி... மருத்துவமனையில் தீவிர சிகிச்சை..

காலாவதியான உணவை சாப்பிட்டால் ஏற்படும் ஆபத்தை தவிர்க்க சில குறிப்புகள் இங்கே..

நிதானமாக இருங்கள்...காலாவதியான உணவை சாப்பிட்டுவிட்டோமே... என்ன ஆகுமோ என்று கவலைப்பட வேண்டாம். பயம் உங்கள் கவலையை மேலும் அதிகரிக்கும். முடிந்தவரை பதறாமல் அமைதியாக இருங்கள். மூச்சை ஆழமாக விட்டு சுவாசியுங்கள். நீங்கள் அனுபவிக்கும் அறிகுறிகளுக்கு ஏற்ப சிகிச்சை எடுத்து கொள்ளுங்கள். உதாரணமாக, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, காய்ச்சல், தலைவலி அல்லது தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகள் ஏற்படும். 
 
அதுமட்டுமின்றி.. அத்தகைய உணவை சாப்பிட்ட உடனே நிறைய தண்ணீர் குடியுங்கள். காரணம், நீர் உடலில் உள்ள நச்சுத்தன்மையை வெளியேற்றும். அதுபோல், அறிகுறிகள் மிகவும் கடுமையானதாக இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!