Walking Mistakes : தினமும் நடந்தும் உடல் எடையை குறைய முடியலயா..? காரணம் இதுதாங்க..

First Published Apr 13, 2024, 7:00 AM IST

நடைபயிற்சிக்கு சில விதிகள் உள்ளன தெரியுமா.? அவற்றை ஒழுங்காக பின்பற்றாவிட்டால், இடுப்பு, கால் மற்றும் முதுகு பிரச்சனைக்கு வழிவகுக்கும். எனவே, சரியான விதிகளை கற்றுக்கொள்ளுங்கள். 

பொதுவாகவே பலர் உடல் எடையை குறைப்பதற்காக ஜிம்மிற்கு செல்வார்கள். சிலர் நடைப்பயிற்சி செய்வார்கள். தினமும் தவறாமல் நடைப்பயிற்சி மேற்கொண்டால் உடல் கொழுப்பை சுலபமாக கரைக்கலாம். ஆனால், சரியான பாதையில் நடப்பது மிகவும் அவசியம். இல்லையெனில், அது ஆபத்தில் முடிந்து விடும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

ஆய்வு படி, இதய ஆரோக்கியத்திற்கு சிறந்த உடற்பயிற்சி எதுவென்றால், அது நடைப்பயிற்சி தான். இது கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் மற்றும் ஆற்றல் அளவை அதிகரிக்கும். குறிப்பாக, அதிக எடையைக் குறைக்க பெரிதும்  உதவுகிறது. மேலும் மன அழுத்தத்தை நீக்குகிறது. 

ஒரு நாளைக்கு குறைந்தது 30-45 நிமிடங்கள் நடந்தால், வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருக்கலாம். ஆனால் நடைபயிற்சிக்கு சில விதிகள் உள்ளன தெரியுமா.? அவற்றை ஒழுங்காக பின்பற்றாவிட்டால், இடுப்பு, கால் மற்றும் முதுகு பிரச்சனைக்கு வழிவகுக்கும். எனவே, சரியான விதிகளை கற்றுக்கொள்ளுங்கள். இப்போது அதுகுறித்து இங்கு பார்க்கலாம்.

நடக்கும்போது பாதங்களில் அதிக அழுத்தம் கொடுக்காதீர்கள். இதன் காரணமாக, எலும்புகள் மற்றும் தசைகளின்  செயல்பாடுகளைச் செய்ய போதுமான நேரம் கிடைக்காது. எனவே, மெதுவாக நடக்க பழகுங்கள்.

சரியான முறையில் நடக்கவும். எப்படியெனில், நேரான முதுகு மற்றும் தளர்வான தோள்களுடன் விறுவிறுப்பாகவும், நிதானமான மனநிலையிலும் நடக்கவும்.

நடைபயிற்சிக்கு பொருத்தமான காலணிகளை பயன்படுத்தவும்.  முறையற்றதை பயன்படுத்தினால் கால்களில் அழுத்தம் ஏற்படுத்தும். எனவே, கால் பிரச்சனைகளைத் தடுக்கவும், நடைபயிற்சி சிரமம் இல்லாத உங்களுக்கு வசதியான காலணிகளை பயன்படுத்துங்கள்.

கோடை வெயிலில் ஓடினால் அதிகமாக வியர்க்கும். எனவே, உங்கள் உடலை எப்போதும் நீரேற்றமாக வைத்திருப்பது மிகவும் அவசியம்.
இல்லையெனில் உடலில் எலக்ட்ரோலைட் அளவு குறைந்து சோர்வு ஏற்படும். எனவே, வாக்கிங் செல்லும் போது கூடவே தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்லுங்கள்.

click me!