Buttermilk : கோடையில் மோர் குடித்தால் உடலுக்கு இத்தனை நன்மைகளா..? தெரிஞ்சா விட மாடீங்க!

First Published Apr 13, 2024, 8:00 AM IST


கோடையில் மோர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை குறித்து இந்த பதிவில் காணலாம்.
 

கோடைக்காலம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த காலகட்டத்தில், உடல் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருப்பது மிகவும் அவசியம். இல்லையெனில், உயிருக்கு ஆபத்து என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

இத்தகைய சூழ்நிலையில், மோர் உங்களுக்கு சிறந்த தீர்வு ஆகும். ஏனெனில் இதில் பல வகையான சத்துக்கள் உள்ளன. எனவே, தினமும் ஒரு டம்ளர் மோர் குடித்து வந்தால், பல பிரச்சனைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். குறிப்பாக, கோடையில் மோர் குடித்தால்,  உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

மோரில் உள்ள வைட்டமின்கள், தாதுக்கள் நோய்களை எதிர்த்துப் போராடும் மற்றும் எலும்புகள் வலுவாக இருக்கும். முக்கியமாக, இது கோடையில் உடலை நீரேற்றமாக வைத்திருக்கும். இதில் கலோரிகள் குறைவாக இருப்பதால், எடை குறைப்பதற்கு சிறந்த தீர்வாகும்.

அதுபோல், மோரில் லாக்டிக் அமிலம் உள்ளது. இது சருமத்தை மென்மையாகவும், பளபளப்பாகவும் மாற்றும். குறிப்பாக, கோடையில் பலருக்கு செரிமான பிரச்சனை வரும். அவற்றை சரி செய்ய இது உதவும் மற்றும் வயிற்று ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

அதுமட்டுமின்றி, கோடையில் ஆற்றல் விரைவாக மந்தமாகிவிடும். அத்தகைய நேரத்தில் மோர் குடிப்பது நல்ல நிவாரணம் கிடைக்கும். மேலும் இது ஆற்றல் அளவுகளை உடனடியாக அதிகரிக்கும் மற்றும் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும்

click me!