இரவில் நல்ல தூக்கம் வர... சாப்பிட்ட பின் 30 நிமிடம் இப்படி செய்யுங்கள்..

First Published Feb 16, 2024, 9:00 PM IST

இரவு உணவு சாப்பிட்ட பிறகு நடப்பது நல்ல தூக்கத்திற்கு உதவும். இதனால் தூக்கமின்மை பிரச்சினை நீங்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
 

நாம் ஆரோக்கியமாக இருக்க, ஆரோக்கியமான உணவை சாப்பிடுவது மட்டுமல்ல, நமது பழக்கவழக்கங்களும் சரியாக இருக்க வேண்டும். குறிப்பாக உணவு சாப்பிட்ட பிறகு சில பழக்கங்கள் செய்வது மிகவும் நல்லது. 
 

உண்மையில் சிலர் இரவு உணவு சாப்பிட்ட உடனேயே தூங்குவதை பழக்கமாக வைத்திருப்பார்கள் ஆனால் இது உடல் நலத்திற்கு கேடு. நீங்களும் அப்படிச் செய்தால், இந்தப் பழக்கத்தை உடனடியாக மாற்றிக் கொள்ளுங்கள். இந்த தவறான பழக்கத்தால் உணவு சீக்கிரம் ஜீரணமாகாமல் இருக்கும். மேலும் உடல் எடையும் கூடும்.
 

இரவு உணவுக்குப் பிறகு 15 முதல் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்வது செரிமானத்தை மேம்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். மேலும் இதனால் உணவு எளிதில் ஜீரணமாகும். சாப்பிட்ட உடனேயே தூங்குவது செரிமான செயல்முறை மேலும் குறைக்கும் மற்றும் பலவிதமான வயிற்றுப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். 

நிபுணர்களின் கூற்றுப்படி, இரவு சாப்பிட்ட பிறகு சிறிது நேரம் நடப்பது நல்லது என்கிறார்கள். இதன் மூலம் இரத்த குளுக்கோஸ் அல்லது இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க முடியும். தினமும் இப்படி செய்தால் வாயு, வீக்கம் மற்றும் தூக்கமின்மை பிரச்சனைகள் நீங்கி இதயம் ஆரோக்கியமாக இருக்கும். இருப்பினும் தீவிரம், நேரம் மற்றும் தூரம் குறித்து கவனமாக இருப்பது மிகவும் அவசியம், இல்லையெனில் நீங்கள் அஜீரணம் மற்றும் வயிற்று வலியால் பாதிக்கப்படலாம்.  
 

சாப்பிட்ட பின் நடப்பது மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஏனெனில் நடைப்பயிற்சி மன அழுத்த ஹார்மோன் கார்டிசோலை குறைக்கிறது. ஒருவர் நடைப்பயிற்சி செய்யும்போது, உடலில் எண்டோர்பின்கள் வெளியாகும். இது ஒரு இயற்கை வலி நிவாரணியாக செயல்படுகிறது. இது பதட்டத்தை குறைக்கிறது, மனநிலையை மேம்படுத்துகிறது மற்றும் மன அழுத்தத்தை குறைக்கிறது.

இதையும் படிங்க:  இரவு உணவிற்கு இந்த 7 வகையான உணவுகளை ஒருபோதும் சாப்பிடாதீங்க..!

நிபுணர்களின் கூற்றுப்படி, இரவு உணவு சாப்பிட்ட பிறகு நடப்பது நல்ல தூக்கத்திற்கு உதவும். இதனால் தூக்கமின்மை பிரச்சினை நீங்கும் மற்றும் சீக்கிரமாக தூங்க உதவும். எனவே இரவில் சரியாக தூங்கம் வர வில்லை என்றால், சாப்பிட்ட பிறகு 10-15 நிமிடங்கள் நடக்கவும்.

இதையும் படிங்க:  இரவு உணவை தவிர்க்கிறீர்களா? காரணம் தெரிந்தால் இனி இதை செய்யமாட்டீங்க!

அதுபோல், இரவில் நடப்பது இதய நோய் மற்றும் பக்கவாதத்தில் இருந்து உங்களைப் பாதுகாக்கும். உயர் இரத்த அழுத்தம் மற்றும் எல்டிஎல் கொழுப்பைக் குறைக்கிறது. மேலும் ஆரோக்கியமான இதயத்திற்கு, ஒரு நபர் ஒவ்வொரு வாரமும் 5 நாட்களுக்கு குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் மிதமான தீவிர உடற்பயிற்சி செய்ய வேண்டும். நீங்கள் விரும்பினால், இரவு உணவிற்குப் பிறகு 30 நிமிடங்கள் நடக்கலாம் அல்லது காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு என மூன்றாக பிரித்து 10 நிமிடங்கள் நடக்கலாம்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

click me!