Vijay Fans Meet: கேரள ரசிகர்களுடன் செல்ஃபி.. முத்தங்களை பறக்க விட்ட தளபதி! வேற லெவலுக்கு மாஸ் காட்டிய போட்டோ!

First Published Mar 22, 2024, 9:54 PM IST

தளபதி விஜய் கேரள ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து கொண்டு, அவர்களுக்கு முத்தங்களை பறக்க விட்ட, புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
 

தளபதி விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம், 'லியோ'. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படம், கடந்த ஆண்டு வெளியான நிலையில்... விமர்சன ரீதியாக சில ஏற்ற இறக்கங்களை சந்தித்தாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றது. 

இந்த படத்தில் நடித்து முடித்த கையோடு... இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ள தகவலை உறுதி செய்தார் விஜய். AGS நிறுவனம் பிரமாண்ட பொருட்செலவில் தயாரித்து வரும் இந்த படத்திற்கு 'கிரேட்டஸ்ட் ஆப் தி ஆல் டைம்ஸ்' அதாவது (GOAT)  என பெயரிடப்பட்டுள்ளது. விஜய் பிகில் படத்திற்கு பின்னர் இரட்டை வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில், அப்பா விஜய்க்கு ஜோடியாக நடிகை சினேகாவும், மகன் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுதிரியும் நடிக்கின்றனர்.

Chiyaan 62 Update: போட்ரா வெடிய.. சீயான் 62 படப்பிடிப்பு எப்போது துவக்கம்? மாஸ் அப்டேட் கொடுத்த படக்குழு!

மேலும் முக்கிய கதாபாத்திரத்தில், பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல், வைபவ், பிரேம்ஜி, லைலா, மைக் மோகன் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. இப்படத்தின் விறுவிறுப்பான இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் எடுக்கப்பட்டு வருகிறது.

'கோட்' படப்பிடிப்புக்காக விஜய் அங்கு சென்றதில் இருந்தே, தினம் தோறும் விஜயை பார்க்க ஏராளமான ரசிகர்கள் அங்கு கூடுவதும், தளபதி அவர்களை சந்திப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார். 

Anjali Marriage: விவாகரத்தான தயாரிப்பாளருடன் மலர்ந்த காதல்? அஞ்சலிலு விரைவில் திருமணமா? தீயாய் பரவும் தகவல்!

அந்த வகையில் இன்றைய சந்திப்பின் போது, கேரள ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்து கொண்ட விஜய்... பின்னர் அவர்களுக்கு முத்தங்களை பறக்க விட்டு, சில நிமிடங்கள் உரையாடியுள்ளார். இதுகுறித்த போட்டோஸ் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

click me!