Trisha Movies: சவுத் குயின்... த்ரிஷா நடிப்பில் வெளியான இந்த 10 படங்களை கண்டிப்பாக பார்க்க மிஸ் பண்ணாதீங்க!

First Published May 4, 2024, 2:33 PM IST

இன்று தன்னுடைய 41-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நடிகை த்ரிஷா நடிப்பில் வெளியான படங்களில் ரசிகர்கள் மிஸ் பண்ண கூடாத 10 படங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
 

Actress Trisha

சவுத் குயின் என ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகை த்ரிஷா, தென்னிந்திய திரையுலகில் கடந்த 20 வருடங்களாக யாராலும் அசைக்க முடியாத இடத்தை பிடித்தவர். 41 வயதிலும் இளம் நடிகைகளுக்கு நிகராக ரசிக்கப்படும் இவர் நடிப்பில் வெளியான முத்தான 10 படங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
 

Gilli Movie:

கில்லி:

இயக்குனர் தரணி நடிப்பில், கடந்த 2004-ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் 'கில்லி'. இந்த படத்தில் நடிகை த்ரிஷா, தன்னுடைய அப்பாவித்தனமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். இப்படம் விஜய் -  த்ரிஷா ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரட் மூவியாக உள்ளது. இப்படம் சுமார் 20 வருடங்களுக்கு பின்னர் ரீ-ரிலீஸ் ஆன நிலையில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்தது.

Nayanthara: ஏர்போர்ட்டில் கூட.. குழந்தைகளை கண்ணும் கருத்துமாக பார்த்து கொள்ளும் நயன்தாரா! வைரலாகும் வீடியோ!

Aaru Movie:

ஆறு:

இயக்குனர் ஹரி இயக்கத்தில், நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் 'ஆறு'. இந்த படத்தில் மாடர்ன் பெண்ணாகவும், உருக  வைக்கும்  காதலால் ரசிகர்கள் மனதை மயங்கினார் திரிஷா. எனவே இந்த படத்தையும் ரசிகர்கள் மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டும்.

Unakkum Enakkum:

உனக்கும் எனக்கும்:

இயக்குனர் மோகன் ராஜா இயக்கத்தில், ஜெயம் ரவி நடிப்பில் 2006-ஆம் ஆண்டு வெளியான எமோஷ்னல் காதல் திரைப்படம் 'உனக்கும் எனக்கும்'. ஜெயம் ரவிக்கு ஜோடியாக திரிஷா கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் த்ரிஷாவின் உணர்வு பூர்வமான நடிப்பை பார்க்க முடியும்.

Trisha Car Collection : த்ரிஷானா சும்மாவா.. டாப் ஹீரோக்களுக்கு நிகரான கார் கலெக்ஷன் - ஒரு லிஸ்டே இருக்கு!
 

Vinnai Thandi Varuvaaya:

விண்ணை தாண்டி வருவாயா:

இயக்குனர் கெளதம் மேனன் இயக்கத்தில், த்ரிஷா - சிம்பு நடிப்பில் 2010-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'விண்ணைத்தாண்டி வருவாயா. முழுக்க முழுக்க காதல் காதலை மையமாக வைத்து உருவான இந்த படத்தில், ஜெசி என்கிற கதாபாத்திரமாகவே வாழ்ந்து நடித்திருந்தார் த்ரிஷா. இப்படத்தில் த்ரிஷாவின் வேறுவிதமான நடிப்பை பார்க்க முடியும்.

Ennai Arindhal:

என்னை அறிந்தால்:

அஜித்தை வைத்து இயக்குனர் கெளதம் மேனன் இயக்கிய திரைப்படம் 'என்னை அறிந்தால்'. இந்த படத்தில் த்ரிஷா சில நிமிடங்களே வந்து செல்லும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். டான்சராக த்ரிஷா நடித்திருந்த இந்த படத்தில், அவரின் நளினமான நடிப்பையும்... இதமான காதலையும் நடிப்பிலேயே வெளிப்படுத்தி இருந்தார் இருந்தார்.

Jason Sanjay: அதிதி ஷங்கரின் போட்டோ ஷூட்டில் தளபதி மகன் சஞ்சய்! ஹாண்ட்சம் ஹீரோவை போல் கொடுத்த அசத்தல் போஸ்!

Kodi Movie:

கொடி:

பல படங்களில் பாசிட்டிவான வேடங்களில் திரிஷா நடித்திருந்தாலும், கொடி படத்தில் நெகட்டிவ் ரோலில் நடித்து... தன்னால் இப்படி பட்ட வேடங்களிலும் நடிக்க முடியும் என நிரூபித்த திரைப்படம் இது. இப்படம் தோல்வி படமாக இருந்தாலும், த்ரிஷாவின் போல்டான நடிப்பை பார்க்ப்பதற்காகவே எத்தனை முறை வேண்டுமானாலும் இப்படத்தை பார்க்கலாம்.

96 Movie:

96:

இயக்குனர் பிரேம் குமார் இயக்கத்தில்... திரிஷா - விஜய் சேதுபதி நடிப்பில் 2018-ஆம் ஆண்டு வெளியாகி,  90'ஸ் கிட்சை மீண்டும் பள்ளி காலத்திற்கு அழைத்து சென்ற திரைப்படம் '96'. இப்படத்தில் மிகவும் மெச்சூர்டான நடிப்பை... வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். இப்படத்தில் இவர் நடிப்பு மட்டும் இன்றி, இவரின் காஸ்டியூம் போன்றவை கூட ரசிகர்களால் அதிகம் கவனிக்கப்பட்டதாக மாறியது.

Sanchana: 'சார்பட்டா' பட நடிகை சஞ்சனா நட்ராஜன் காதலர் இந்த பிரபலமா? 17 டேக் எடுத்து ஓகேவான வீடியோ வைரல்!

Petta Movie:

பேட்ட:

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய திரைப்படம் 'பேட்ட'. இந்த படத்தில் ரஜினிகாந்தின் மனைவியாக திரிஷா நடித்திருந்தார். சில நிமிடங்களே இவரின் காட்சிகள் இப்படத்தில் இடம்பெற்றிருந்தாலும், திரிஷாவின் கதாபாத்திரம் மற்றும் நடிப்பு ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தது. எனவே இந்த படத்திலும் த்ரிஷாவின் நடிப்பை மிஸ் பண்ணிடாதீங்க.

Raangi Movie:

ராங்கி:

திரிஷா கதையின் நாயகியாக நடித்து, லைகா நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்தில்... திரிஷா பத்திரிகையாளராக நடித்திருந்தார். பரபரப்பான கதையம்சத்தில் வெளியான இப்படம், த்ரிஷாவின் ரசிகர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

பிதாமகன் கெட்டப்புக்கு மாறிய கவின்! நெல்சன் தயாரிப்பில் கவின் நடிக்கும் 'பிளடி பெக்கர்' படத்தின் கலக்கல் டீசர்

Ponniyin Selvan:

பொன்னியின் செல்வன்:

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில், இரண்டு பாகமாக வெளியான திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. இந்த படத்தில் த்ரிஷா குந்தவையாக நடித்திருந்தார். த்ரிஷாவின் எதார்த்தமான நடிப்பு இப்படத்தில் பல ரசிகர்களை கவர்ந்தது. த்ரிஷா திரையுலக வாழ்க்கையில் மாஸ்டர் பீஸ் படமாக பொன்னியின் செல்வம் அமைந்தது குறிப்பிடத்தக்கது.

click me!