முதல் முறையாக குறைவான, 13,079 பந்துகளில் 1000 சிக்ஸர்கள்: சாதனை படைத்த ஐபிஎல் 17ஆவது சீசன்!

First Published May 9, 2024, 9:36 AM IST

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான 57ஆவது லீக் போட்டியின் போது லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் வீரர் குர்ணல் பாண்டியா 2 சிக்ஸர்கள் அடித்ததன் மூலமாக ஐபிஎல் 2024 கிரிக்கெட்டில் 1000 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளது.

IPL, SRH, Travis Head , Abhishek Sharma

ராஜீவ் காந்தி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 57ஆவது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக முதலில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் பேட்டிங் தேர்வு செய்தார். அதன் படி முதலில் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் மட்டுமே எடுத்தது.

IPL 2024 SRH vs LSG

குயீண்டன் டி காக் மற்றும் கேஎல் ராகுல் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் புவனேஷ்வர் குமார் வீசிய முதல் ஓவரில் 3 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. பிறந்தநாள் ஹீரோவான பேட் கம்மின்ஸ் வீசிய 2ஆவது ஓவரில் ஒரு சிக்ஸர் உள்பட 10 ரன்கள் மட்டும் எடுக்கப்பட்டது. மீண்டும் 3ஆவது வீசிய புவனேஷ்வர் குமாரின் முதல் பந்திலேயே டி காக் 2 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். இந்த சீசனில் தொடர்ந்து அவர் மோசமான ஃபார்மை வெளிப்படுத்தி வந்துள்ளார்.

IPL 2024 SRH vs LSG

இந்த ஓவரில் புவனேஷ்வர் குமார் 2 ரன்கள் மட்டுமே கொடுத்துள்ளார். 4ஆவது ஓவரை ஷாபாஸ் அகமது வீசினார். இந்த ஓவரில் 5 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டது. புவனேஷ்வர் குமார் வீசிய 5ஆவது ஓவரில் முதல் பந்தில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். அந்த ஓவரில் 3 ரன்கள் மட்டுமே கொடுக்கப்பட்டது.

IPL 2024 SRH vs LSG

இதன் மூலமாக இந்த சீசனில் பவர்பிளேயில் மட்டும் புவனேஷ்வர் குமார் 10 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். டெல்லி வீரர் கலீல் அகமது 8 விக்கெட்டும், கேகேஆர் வீரர் வைபவ் அரோரா 7 விக்கெட்டும், ராஜஸ்தான் வீரர் டிரெண்ட் போல்ட் 7 விக்கெட்டும் கைப்பற்றியுள்ளனர்.

IPL 2024 SRH vs LSG

இறுதியாக லக்னோ பவர்பிளேயில் 2 விக்கெட்டுகளை இழந்து 27 ரன்கள் மட்டுமே எடுத்து மோசமான சாதனை படைத்துள்ளது. இந்த சீசனில் பவர்பிளேயில் குறைவான ரன்கள் எடுத்த 2ஆவது அணியாக லக்னோ மோசமான சாதனை படைத்துள்ளது.

IPL 2024 SRH vs LSG

அதோடு, பவர்பிளேயில் ஒரு பவுண்டரி கூட அடிக்காத மற்றொரு மோசமான சாதனையையும் படைத்துள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது பவர்பிளேயில் ஒரு பவுண்டரி கூட அடிக்காமல் 2 சிக்ஸர்கள் மட்டுமே எடுத்து மோசமான சாதனை படைத்த முதல் அணியாக சரித்திரம் படைத்தது.

IPL 2024 SRH vs LSG

தற்போது 2ஆண்டுகளுக்கு பிறகு 2ஆவது அணியாக லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மோசமான அணியாக சரித்திரம் படைத்துள்ளது. ஜெயதேவ் உனத்கட் வீசிய 8ஆவது ஓவரில் குர்ணல் பாண்டியா அடுத்தடுத்து 2 சிக்ஸர்கள் விளாசியதன் மூலமாக இந்த சீசனில் 1000 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளது.

IPL 2024 SRH vs LSG

அதோடு, குறைந்த பந்துகளில் 1000 சிக்ஸர்கள் அடிக்கப்பட்ட சீசனாக இந்த சீசன் புதிய சாதனை படைத்துள்ளது. 13,079 பந்துகளில் 1000 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளது. 2022 ஆம் ஆண்டுகளில் 16,269 பந்துகளிலும், 2023 ஆம் ஆண்டுகளில் 15,390 பந்துகளிளும் 1000 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டுள்ளது.

IPL 2024 SRH vs LSG

மொத்தமாக 2022 ஆம் ஆண்டு 1062 சிக்ஸர்களும், 2023 ஆம் ஆண்டு 1124 சிக்ஸர்களும் அடிக்கப்பட்டுள்ளது. கடைசியாக கேஎல் ராகுல் 29 ரன்னிலும், குர்ணல் பாண்டியா 24 ரன்னிலும் ஆட்டமிழந்தார். இறுதியாக நிக்கோலஸ் பூரன் மற்றும் ஆயூஷ் பதோனி இருவரும் அதிரடியாக விளையாடவே லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியானது 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்கள் எடுத்துள்ளது.

IPL 2024 SRH vs LSG

இதில், ஆயூஷ் பதோனி 30 பந்துகளில் 9 பவுண்டரி உள்பட 55 ரன்களுடனும், நிக்கோலஸ் பூரன் 26 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 48 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பவுலிங்கை பொறுத்த வரையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டும், பேட் கம்மின்ஸ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

IPL 2024 SRH vs LSG

பின்னர் எளிய இலக்கை துரத்திய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் பேட் கம்மின்ஸ் இன்று தனது 31ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு டிரீட் கொடுக்கும் வகையில் ஹைதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட் மற்றும் இம்பேக்ட் பிளேயராக அபிஷேக் சர்மா இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

IPL 2024 SRH vs LSG

இதில், அபிஷேக் சர்மா இன்று தனது 100ஆவது டி20 போட்டியில் விளையாடினார். தொடக்கம் முதலே ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா இருவரும் அதிரடியாக விளையாடினர். இதில், ஹெட் 16 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார். இதில், 6 பவுண்டரி, 4 சிக்ஸர் அடங்கும். மேலும், இந்த சீசனில் 2ஆவது முறையாக 16 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார். ஒரு முறை 18 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார்.

IPL 2024 SRH vs LSG

டிராவிஸ் ஹெட்டைத் தொடர்ந்து அபிஷேக் சர்மா 19 பந்துகளில் 54 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார். கடைசியில் இருவரும் சிக்ஸரும், பவுண்டரியுமாக விளாசவே சன்ரைசர்ஸ் ஹைதராபாத் 9.4 ஓவர்களிலேயே 167 ரன்கள் எடுத்து 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. 

click me!