"வாத்தி".. ஞாயமா இது?.. சீரியலுக்கு குட் பை - சத்தமில்லாமல் காதலரை கரம்பிடித்த பிரபல சின்னத்திரை நடிகை ரம்யா!

First Published Sep 24, 2023, 4:58 PM IST

Ramya Gouda Marriage : வெள்ளித்திரை நட்சத்திரங்களுக்கு இணையாக சின்னத்திரை நடிகை, நடிகைகளுக்கும் பெரிய அளவில் ரசிகர் கூட்டம் உண்டு. அந்த வகையில் வாத்தி என்று செல்லமாக அழைக்கப்படும் நடிகை ஒருவர், சத்தமே இல்லாமல் தனது காதலரை கரம்பிடித்துள்ளார். 

Actress Ramya

பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் கடந்த 2020ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை ஒளிபரப்பான நாடகம் தான் அபியும் நானும், உண்மையில் இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு இருந்தது. குறிப்பாக இந்த நாடகத்தில் நடித்து வந்த வாத்தி என்கிற ரம்யா கௌடாவிற்கு பெரிய அளவில் ரசிகர் கூட்டம் உண்டு.

குஷி படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை அதிரடியாக மாற்றிய நெட்பிளிக்ஸ்... புது ரிலீஸ் தேதி அறிவிப்பு

Actress Ramya Gouda

வாத்தியின் அதிரடியான நடிப்பை பார்ப்பதற்கு என்றே இந்த சீரியலை விரும்பி பார்த்தவர்கள் மிகவும் அதிகம். இந்நிலையில் அந்த சீரியல் முடிந்த பிறகு, ரம்யா செவ்வந்தி என்ற சீரியலில் நடித்து வந்தார். அர்ச்சனா என்ற கதாபாத்திரத்தில் மிகவும் நேர்த்தியாக நடித்து வந்தார் அவர்.

Ramya Gouda

ஆனால் அந்த சீரியலிலும் கடந்த சில நாட்களாக அவர் தோன்றவில்லை, இந்த சூழலில் தான் அவர் தனது நீண்ட நாள் காதலரான நடிகர் பார்கவ் என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். பார்கவ் அவர்களும் ஒரு சீரியல் நடிகர் தான், அவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது ரம்யாவின் திருமண புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

சேலையில் அன்லிமிடெட் கவர்ச்சி... இடுப்பை காட்டுவதில் குஷி ஜோதிகாவையே மிஞ்சிய நடிகை அனசுயா பரத்வாஜ்

click me!