Air India in Delhi Airport : டெல்லியில் இருந்து இன்று மாலை 6 மணியளவில் 175 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் அதன் ஏர் கண்டிஷனிங் யூனிட்டில் தீப்பிடித்ததால் உடனடியாக டெல்லியில் தரையிறங்கியது.
இன்று மே 17ம் தேதி டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கிச் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், இன்று வெள்ளிக்கிழமை மாலை சுமார் 6 மணியளவில் மீண்டும் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டதாக விமானநிலைய வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டெல்லியில் இருந்து மாலை 6 மணியளவில் 175 பயணிகளுடன் புறப்பட்ட அந்த ஏர் இந்தியா விமானதின், ஏஐ 807, அதன் ஏர் கண்டிஷனிங் யூனிட்டில் தீப்பிடித்ததால் உடனடியாக திரும்பி டெல்லியில் தரையிறங்கியதாக அவர்கள் தெரிவித்தனர். மேலும் இந்த விமானத்தில் 175 பயணிகள் பயணித்த நிலையில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
மதுப்பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி.. தொடர்ந்து 3 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடப்படும்..
இன்று வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் புறப்பட்ட அந்த ஏர் இந்தியா விமானம், மீண்டும் இன்று மாலை 6.38 மணிக்கு டெல்லியில் உள்ள ஐஜிஐ விமான நிலையத்தில் தரையிறங்கியது என்று விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன. விமானத்தின் மூக்கில் சேதம் ஏற்பட்டதாகவும், தரையிறங்கும் கியருக்கு அருகே டயர் ஒன்றும் சேதமடைந்துள்ளதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
"மேலும் இந்த நிகழ்வில் விமானத்தில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது" என்று அந்த அதிகாரி மேலும் கூறினார். இதேபோல டெல்லிக்கு சென்று கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம், புனே ஏர்போர்ட்டில் டேக்-ஆஃப் செய்வதற்காக ஓடுபாதையை நோக்கி சென்றபோது, நேற்று வியாழக்கிழமை இழுவை டிரக் மீது மோதியுள்ளது.
இந்த பயங்கர சம்பவத்தின் போது அந்த விமானத்தில் 180 பயணிகள் இருந்தனர் என்றும், எனினும் அந்த விதத்திலும் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
சூப்பர் ஆக்டிங் ராஷ்மிகா மந்தானா ஜி: ஒரு குட்டி கதை சொல்லவா? கேரளா காங்கிரஸ் பொளேர்!