சூப்பர் ஆக்டிங் ராஷ்மிகா மந்தானா ஜி: ஒரு குட்டி கதை சொல்லவா? கேரளா காங்கிரஸ் பொளேர்!
தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தானாவின் நடிப்பு நன்றாக இருந்ததாக கூறியுள்ள கேரள காங்கிரஸ் அடல் சேது பாலத்தின் கணக்கு குறித்து தெரிவித்துள்ளது
மகாராஷ்டிர மாநில தலைநகர் மும்பை மற்றும் அருகில் உள்ளநவிமும்பை நகரங்களை இணைக்கும் வகையில் அரபிக்கடலில் 22 கி.மீ. தூரத்துக்கு பிரம்மாண்ட கடல் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அடல் பிகாரி வாஜ்பாய் நினைவாக அமைக்கப்பட்டுள்ள ‘அடல் சேது’ என பெயரிடப்பட்டுள்ள இந்த பாலம் நாட்டிலேயே மிக நீளமான கடல்வழி பாலமாக அமைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மிக நீளமான கடல்வழி பாலம் என்ற சிறப்பை பெற்றுள்ள இந்த பாலம், மும்பை சிவ்ரி பகுதியில் தொடங்கி நவிமும்பை புறநகரான சிர்லேவில் முடிவடைகிறது. நவிமும்பை நவசேவா துறைமுகத்தை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதால், இது ‘மும்பை டிரான்ஸ் ஹார்பர் லிங்க்’ (துறைமுக இணைப்பு பாலம்) எனவும் அழைக்கப்படுகிறது.
இந்த நிலையில், நாட்டிலேயே மிக நீளமான கடல்வழி பாலமாக அமைக்கப்பட்டுள்ள ‘அடல் சேது’ பாலம் குறித்து நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். இதுகுறித்து அவரது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில், “மும்பை - நவி மும்பை நகரங்களை இணைக்கும் வகையில் நாட்டிலேயே மிக நீளமான கடல்வழி பாலமாக அமைக்கப்பட்டுள்ளது ‘அடல் சேது’ பாலம். இதன் மூலம் இரண்டு மணி நேர பயணம் இருபது நிமிட பயணமாக மாறியுள்ளது. இது சாத்தியம் என நாம் யாராவது நினைத்துப் பார்த்திருப்போமா?
இதுபோன்ற உள்கட்டமைப்பு வசதிகளால்தான் எளிதில் நம்மால் பயணம் மேற்கொள்ள முடிகிறது. இது எனக்கு பெருமை அளிக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் நாடு கண்டுள்ள வளர்ச்சியைப் பாருங்கள். இது அற்புதமானது. உள்கட்டமைப்பு சார்ந்த திட்டமிடல் அபாரமாக உள்ளது. இளம் தலைமுறையை கொண்டுள்ள இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது. இந்தியா ஸ்மார்ட்டான நாடு. இளம் பாரதியார்கள் வாக்களிக்க வேண்டும். இப்போது அவர்களுக்கு அந்த பொறுப்பு உள்ளது. அவர்கள் சரியான திசையில் பயணிக்கிறார்கள் என மக்கள் நம்புகிறார்கள். இந்த வளர்ச்சி இதோடு நிற்கக்கூடாது. வளர்ச்சிக்காக வாக்களியுங்கள்.” என அந்த பாலத்தில் நின்று பேசி வீடியோவாக பேசி தனது எக்ஸ் பக்கத்தில் ராஷ்மிகா மந்தானா பகிர்ந்திருந்தார். இந்த வீடியோவை பிரதமர் மோடியும் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதற்கு ராஷ்மிகா மந்தானா மகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தெலுங்கு நடிகை ராஷ்மிகா மந்தனாவின் நடிப்பு நன்றாக இருந்ததாக கூறியுள்ள கேரள காங்கிரஸ் அடல் சேது பாலத்தின் கணக்கு குறித்து தெரிவித்துள்ளது. இதுகுறித்து கேரளா காங்கிரஸ் தனது எக்ஸ் பக்கத்தில், “அன்புள்ள ரஷ்மிகா மந்தனா ஜி.., பணம் செலுத்தும் விளம்பரங்களையும், பினாமி விளம்பரங்களையும் இதற்கு முன் தேசம் பார்த்திருக்கிறது. ஆனால், அமலாக்கத்துறை இயக்கிய விளம்பரத்தை நாங்கள் பார்ப்பது இதுவே முதல் முறை. வீடியோ நன்றாக உள்ளது. நன்றாக நடித்துள்ளீர்கள்.
உங்கள் விளம்பரத்தில் அடல் சேது காலியாக இருப்பதை நாங்கள் கவனித்தோம். கேரளாவைச் சேர்ந்தவர்கள் என்பதால், மும்பையில் போக்குவரத்து குறைவு என்று முதலில் நினைத்தோம், அதனால் மும்பை காங்கிரஸில் உள்ள நண்பர்களிடம் இதுகுறித்து கேட்டறிந்தோம்.
ஆனால், ராஜீவ் காந்தி பாந்த்ரா-வொர்லி கடல் இணைப்பில் அதிக போக்குவரத்து இருப்பதாக அவர்கள் தெரிவித்தனர். நமது குறிப்புக்காக வீடியோவையும் அவர்கள் பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோவை பாருங்கள். அதனை இத்துடன் இணைத்துள்ளோம். இதற்கு மறுப்பு தெரிவிப்பவர்களை நம்பவைக்க ஒரு வீடியோ மட்டும் போதாது என்பதால், சில தரவுகளையும் இணைத்துள்ளோம்.
பாந்த்ரா-வொர்லி கடல் இணைப்பு 5.6 கிமீ நீளம் கொண்டது. காங்கிரஸ் அரசால் ரூ.1,634 கோடி செலவில் கட்டப்பட்டது, 2009ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. அமலாக்கத்துறையின் விளம்பரங்கள் அப்போது கேள்விப்படாதவை. பாந்த்ரா-வொர்லி கடல் இணைப்பு எந்த படோபக நிகழ்ச்சியும் இல்லாமல் திறப்பட்டு பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பாந்த்ரா-வொர்லி கடல் இணைப்பு பாலத்தில் பயணம் செய்ய காருக்கு ஒன்றுக்கு ரூ.85 வசூலிக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும் ரூ.9.95 கோடி வசூலிக்கப்பட்டது. விரிவான தரவு MSRDC இணையதளத்தில் கிடைக்கிறது.
வாக்குப்பதிவு விவரங்களை வெளியிட தாமதம் ஏன்? தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!
இப்போது அடல் சேது பாலத்தின் வெற்றியை ஆராய்வோம். இது ரூ.17,840 கோடி செலவில் கட்டப்பட்டது. ஒரு பயணத்திற்கு கார் ஒன்றுக்கு ரூ.250 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது சாமானியர்களால் தாங்க முடியாத தொகை. பாலம் தொடங்கப்பட்டதில் இருந்து ஜனவரி 12ஆம் தேதி முதல் ஏப்ரல் 23ஆம் தேதி வரையிலான 102 நாட்களில் மொத்தமாக ரூ.22.57 கோடி வசூலிக்கப்பட்டது. இதன் மூலம் மாத வருமானம் வெறும் ரூ.6.6 கோடி. இந்த விகிதத்தில், ரூ.17,840 கோடி முதலீட்டை பெற 225 ஆண்டுகள் ஆகும். வட்டிக்கு கணக்கு இல்லை என்பது தனிக்கதை.
பாந்த்ரா-வொர்லி கடல் இணைப்புடன் ஒப்பிடுகையில் சுமார் 20 சதவீத வாகனங்கள் மட்டுமே அடல் சேது பாலத்தைப் பயன்படுத்துகின்றன. என்பதை இது குறிக்கிறது. திறப்பு விழாவிற்கு முன் மதிப்பிடப்பட்ட மாத வருவாய் ரூ.30 கோடியாக இருந்தது, இதன் விளைவாக ஒவ்வொரு மாதமும் ரூ.23.4 கோடி பற்றாக்குறை ஏற்படும், தரவைப் பகிர்ந்து கொள்வதில் MMRDAவுக்கு என்ன தயக்கம் என்பது தெளிவாகத் தெரிகிறது.
இந்த புள்ளி விவரங்களில் புதிய பாலத்தை முயற்சித்து பார்க்கும் மும்பைவாசிகளின் ஆரம்ப உற்சாகமும் அடங்கும். மும்பைவாசிகள் ஏன் பாலத்தை பயன்படுத்துவதில்லை என்பது பற்றி ஒரு வீடியோ வெளியிட்டாலோ அல்லது அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து ஒரு வீடியோ வெளியிட்டாலோ நன்றாக இருக்கும்.” என நடிகை ராஷ்மிகா மந்தானாவை கேரளா காங்கிரஸ் கேட்டுக் கொண்டுள்ளது.