சிவா படம் முடியட்டும்.. அடுத்த ப்ராஜெக்ட்டில் மாஸ் ஹீரோவோடு கைகோர்க்கும் முருகதாஸ் - தரமான சம்பவம் லோடிங்!

First Published Feb 13, 2024, 2:59 PM IST

AR Murugadoss : தல அஜித் அவர்களின் மெகா ஹிட் படமான தீனா படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இயக்குனர் தான் ஏ.ஆர். முருகதாஸ்.

Rajinikanth

பிரபல இயக்குனர் எஸ்.ஜே சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து அதன் பிறகு தமிழ் திரையுலகில் தல அஜித் அவர்களின் "தீனா" திரைப்படத்தின் மூலம் இயக்குனராக களம் இறங்கியவர் தான் ஏ.ஆர் முருகதாஸ். இறுதியாக கடந்த 2020 ஆம் ஆண்டு அவர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் "தர்பார்" திரைப்படம்.

தியேட்டரில் கூட்டமின்றி காத்துவாங்கும் லால் சலாம்; லாபத்தை அள்ளிக்குவிக்கும் லவ்வர் - 4 நாள் வசூல் நிலவரம் இதோ

Sivakarthikeyan

இந்நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளாக திரைப்படங்களை இயக்காத ஏ.ஆர் முருகதாஸ் அவர்கள் தற்போது பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவிருக்கிறார். சிவகார்த்திகேயன் இப்பொது பணிபுரிந்து விடும் தனது 21வது பட பணிகளை முடித்த பிறகு ஏ.ஆர் முருகதாஸ் அவர்களுடன் இணைவார்.

Salman Khan

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் பட பணிகள் முடித்த பிறகு எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு அவர் மீண்டும் பாலிவுட் உலகிற்கு செல்லவிருக்கிறார். ஏற்கனவே அங்கு அவர் தமிழில் இயக்கிய கஜினி திரைப்படத்தை அமீர் கானை வைத்து இயக்கியது குறிப்பிடத்தக்கது. ஹிந்தியில் மொத்தம் 4 படங்களை இயக்கியுள்ள ஏ.ஆர் முருகதாஸ் அவர்கள் தற்பொழுது சல்மான் கானை வைத்து தனது புதிய திரைப்படத்தை இயக்கவிருக்கிறார் என்ற தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது.

பிளாஷ்பாக் : பெரியாரை அப்போ பிடிக்காது.. என் மனம் கவர்ந்த தலைவர் "அவர்" தான் - ஓப்பனாக பேசிய நடிகவேள் M.R ராதா

click me!