ரஜினி, கமல் 50 லட்சம் சம்பளம் வாங்கிய போது.. ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய முதல் தமிழ் நடிகர் யார் தெரியுமா?

First Published May 10, 2024, 4:58 PM IST

Rajikiran: தமிழ் சினிமாவில், முதல் முறையாக ரூ.1 கோடி சம்பளம் வாங்கிய பிரபல நடிகர் யார்? என்பது பற்றி எந்த படத்திற்காக வாங்கினார் என்பது பற்றியும் இந்த தொகுப்பில் பார்ப்போம்.
 

சமீப காலமாக அதிகமாக சம்பளம் பெறுவதை நடிகர்கள் அவர்களின் கௌரவமாக நினைக்க துவங்கி விட்டனர். ஆந்த வகையில் அஜித், விஜய், ரஜினி, கமல் போன்றவர்கள் ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க 150 கோடி முதல் 200 கோடி வரை சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது. ஆனால் இவர்களுக்கு முன்பு, தமிழ் சினிமாவில் அதிரடியாக 1 கோடி சம்பளம் பெற்ற முதல் ஹீரோ என்றால் அது ராஜ்கிரண் தான்.

ராஜ்கிரண் தமிழ் சினிமாவில் ஒரு தயாரிப்பாளராக அறிமுகமாகி பின்னர், நடிகர், இயக்குனர் என பன்முக திறமையாளராக மாறியவர். இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இவரின் சொந்த ஊர் கீழக்கரை. இஸ்லாம் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த இவரின் பெயர் காதர். சினிமாவுக்காக தன்னுடைய பெயரை ராஜ்கிரண் என மாற்றிக்கொண்டார். 

திருமணத்திற்கு முன்பே டேட்டிங்.. அவுட்டிங் என காதலருடன் ஊர் சுற்றும் வரலட்சுமி சரத்குமார்! வைரல் போட்டோஸ்!
 

பேட்டி ஒன்றில்,  ராஜ்கிரண் கூறுகையில்,  “எனக்கு ஒரு கோடி சம்பளம் தருவதாக சொன்னது எனக்கு பெரிதாக தெரியவில்லை. ஏனெனில், நான் 16 வயசுல சென்னைக்கு வந்து முதன்முதலில் வாங்கிய சம்பளம் 4 ரூபாய் 50 பைசா. அப்போது நான் தினக்கூலியாக இருந்தேன். இதையடுத்து என்னுடைய உழைப்பையும், நேர்மையையும் பார்த்து நான் வேலை பார்த்த கம்பெனியிலேயே கிளர்க்காக பதவி உயர்வு கொடுத்தாங்க. அப்போது மாதம் 150 ரூபாய் சம்பளம். பின்னர் அதை 170 ரூபாயாக உயர்த்தி கொடுத்தார். அந்த ஒரு கம்பெனியில் தான் நான் வேலை பார்த்தேன்.பின்னர் தயாரிப்பு நிறுவனம் ஒன்றை துவங்கி திரைப்படங்களை தயாரித்தேன் என கூறியுள்ளார்.

1988-ஆம் ஆண்டு இயக்குனர் டி.கே.போஸ் நடிகர் ராமராஜனை வைத்து இயக்கிய 'என்ன பெத்த ராசா' படம் தான் ராஜ்கிரண் தயாரித்த முதல் படமாகும். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து, 'என் ராசாவின் மனசிலே' படத்தை தயாரித்து இவரே ஹீரோவாகவும் நடித்தார். முதல் படத்தில் ஆறடி உயரம், கட்டுமஸ்தான உடல்வாகு, என ஒரு கர்ஜிக்கும் சிங்கம் போன்ற ஹீரோவாகவே பார்க்கப்பட்டார்.

Prabhas Join Kannappa: அக்‌ஷய் குமாரை தொடர்ந்து ‘கண்ணப்பா’ படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்!

இதைத்தொடர்ந்து அரண்மனை கிளி, எல்லாமே என் ராசாதான், மாணிக்கம், பாசமுள்ள பாண்டியாரே, பொன் விலையுற பூமி என கிராமத்து கதைக்களத்தை தேர்வு செய்து ஹீரோவாக நடித்தார். தனித்துவமான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வந்த ராஜ்கிரண். ரஜினி - கமல் போன்ற நடிகர்கள் முன்னணி நடிகராக இருந்த காலத்தில், அவர்களே 50 முதல் 75 லட்சம் சம்பளமாக வாங்கியபோது, தான் நடித்த படத்திற்கு 1 கோடி சம்பளமாக பெற்றுள்ளார்.

rajkiran

கடந்த 1996-ம் ஆண்டு கே.வி.பாண்டியன் இயக்கத்தில்,  இவர் நடித்த 'மாணிக்கம்' படத்துக்காக தான் முதன் முதலில் ரூ.1 கோடி சம்பளம் வாங்கினாராம். இதன் மூலம் தமிழ் சினிமாவில் முதல் முறையாக ரூ.1 கோடி வாங்கிய நடிகராகவும் மாறினார். இந்த படத்தில் ராஜ்கிரணுக்கு ஜோடியாக வனிதா விஜயகுமார் நடித்திருந்தார். இப்படத்தை அம்மா கிரியேசன்ஸ் சார்பாக டி.சிவா தயாரித்து இருந்தார். இவருக்கு பின்னர் தான் ரஜினி, கமல், விஜயகாந்த் ஆகியோர் 1 கோடி சம்பளம் பெற்றனர் என்பது குறிபிடித்தக்கது. 

Star Movie Review: கவின் நடிப்பில் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ஸ்டார்.. ரசிகர்கள் மத்தியில் மின்னியதா?

click me!